Cricket, India, South Africa, Virat Kohli
இந்தியா கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக 56 நாட்கள் சுற்றுப் பயணமாக கடந்த 27-ந்தேதி நள்ளிரவு மும்பையில் இருந்து புறப்பட்டது. துபாய் வழியாக நேற்றிரவு இந்திய அணி தென்ஆப்பிரிக்கா கேப் டவுன் விமான நிலையம் சென்றடைந்தது. அங்கிருந்து இந்திய வீரர்கள் ஹோட்டலுக்குச் சென்றனர்.சரியான வகையில் பவுலிங் அட்டாக், பேலன்ஸ் அணியால் வெற்றி பெறுவோம்: விராட் கோலி 1

தென்ஆப்பிரிக்கா சென்றதும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘தற்போதைய இந்திய அணியால் தென்ஆப்பிரிக்காவில் தொடரை கைப்பற்ற முடியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா தொடரில் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் சரியான வகையிலான பவுலிங் அட்டாக்கை பெற்றுள்ளோம். சரியான பேலன்ஸில் இந்திய அணி உள்ளது. இந்த அணியால் எந்தவொரு சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும்.

சரியான வகையில் பவுலிங் அட்டாக், பேலன்ஸ் அணியால் வெற்றி பெறுவோம்: விராட் கோலி 2

எங்களுடைய நினைப்பு எல்லாம் திறமையை சரியான வகையில் வெளிப்படுத்தி, சிறப்பான ஆட்டத்தை வழங்கி செசனில் வெற்றி பெற வேண்டும் என்பதை பற்றிதான். நாங்கள் விளையாடும் ஒரு குறிப்பிட்ட நாட்டில் வரலாறு படைக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை.

ஏராளமான வீரர்கள் இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா மண்ணில் விளையாடி உள்ளனர். அதன்பின் எவ்வளவு போட்டி விளையாடினோம், தற்போது எவ்வளவு போட்டியில் விளையாடியுள்ளோம் என்பதை பார்க்க வேண்டும். எங்களுடைய சொந்த ஆட்டங்களை நாங்கள் சிறந்த வகையில் புரிந்து வைத்துள்ளோம். ஒரு அணியாக எங்களுடைய திறமைகள் மீது எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கேப் டவுனில் ஜனவரி 5-ந்தேதி தொடங்குகிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *