டெர்பி: ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை 2017ல் இந்திய அணி முன்னிலை வகித்தாலும் இன்னும் நிறைய விஷயங்களில் அணி கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அந்த அணியின் கேப்டன் மிதிலா ராஜ் தெரிவித்துள்ளார்.
பேட்டிங்கில் சாதனை படைத்து வரும் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், தனக்கு நிகரான ஒரு பார்ட்டன்ர்ஷிப்பை அணியில் உருவாக்கி வருகிறார். “அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அடுத்து பேட்டிங்கிற்கு இறங்கும் வீரர் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே நல்ல பார்ட்டனர்ஷிப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் பெண்கள் அணிக்கு உள்ளது.”
ந்து வீச்சை பொறுத்த மட்டில் ஸ்பின்னர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது அதை செய்தார்கள் ஆனால் அதற்கு முந்தைய இரண்டு போட்டிகளில் அவை விடுபட்டுவிட்டன. எனவே இலங்கைக்கு எதிரான போட்டியிலும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டுவோம் என்கிறார் மிதாலி ராஜ்.
எதிர் அணியைச் சேர்ந்த வீரர்களை அதிக ரன் குவிக்கவிடாமல் பந்து வீச்சாளர்கள் நல்ல முறையில் ஆட்டத்தை கொண்டு செல்வதாக மிதாலி ராஜ் பாராட்டியுள்ளார். முதல் போட்டியாக இருந்த போதும் மன்ஷி ஜோஷி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியுள்ளார், இதன் மூலம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
இலங்கைக்கு நெருக்கடி:
மூன்று போட்டியிலும் தோல்வியை கண்டுள்ளதால் இலங்கை அணி நெருக்கடியான நிலையில் உள்ளது. இது குறித்து அந்த அணியின் கேப்டன் இனோகா ரன்வீரா கூறும்போது, இது வரை நடந்த போட்டிகளின் அனுபவத்தை கொண்டு இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தை எதிர்கொள்வோம். கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் இங்கிலாந்தை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளோம்.
“எங்கள் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே நல்ல முறையில் விளையாடுகின்றனர், அதே போன்று சிறப்பான பார்ட்னர்ஷிப்பையும் வெளிப்படுத்துகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும் இதுவே மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர காரணமாக அமைந்தது.