தெரியாம தான் கேக்குறேன்.. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் பண்ண தெரியுமா? – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேச்சு!

நியூசிலாந்து டி20 தொடரில் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அணுகுமுறையை விமர்சித்துள்ளார் சல்மான் பட்.

நியூசிலாந்து அணியுடன் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது டி20 போட்டியில் 10 ரன்களை சேஸ் செய்த இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு  நல்ல துவக்கம் கிடைத்தது. ஒன்பது பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் அடித்திருந்தார். இந்த துவக்கத்தை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. தவறுதலான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார்.

 

அதேபோல் 18 பந்துகளில் 13 ரன்கள் அடித்து சற்று நேரம் நிதானமாக விளையாடி வந்த ராகுல் திரிப்பாதி, அதை பெரிய ஸ்கோராக மாற்றவில்லை. அவரும் தவறுதலான ஷாட் விளையாடி அவுட்டாகினர்.

இவர்கள் இருவரும் நன்றாக துவங்கி பின்னர் இந்த துவக்கத்தை சரிவர பயன்படுத்தாமல் போனது இந்திய அணிக்கு பின்னடைவை தந்திருக்கிறது. இவர்களின் அணுகுமுறையும் சர்வதேச தரத்திற்கு இல்லை என்று விமர்சித்திருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட்.

“இந்தியா, நியூசிலாந்து இரண்டு அணிகளிலும் பேட்ஸ்மேன்கள் குழப்பத்துடன் உள்ளே களமிறங்கினர். இரு அணிகளிலும் ரன் அவுட் நடந்திருக்கிறது. அதேபோல் மிடில் ஓவர்களில் இது போன்ற குறைந்த ஸ்கோர் சேஸ் செய்யக்கூடிய மைதானங்களில் எப்படி அணுக வேண்டும் என்று பேட்ஸ்மேன்கள் குழப்பத்திலேயே இருந்தனர். மிகப்பெரிய ஷார்ட்கள் அடித்து அழுத்தத்தை குறைக்க வேண்டுமா? அல்லது தொடர்ச்சியாக நிதானத்துடன் விளையாடி ரன் சேர்த்து இலக்கை எட்ட வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட ஓரிரு ஓவர்களை மட்டும் டார்கெட் செய்து அடிக்க வேண்டுமா? என்று எந்தவொரு திட்டமும் இல்லாமல் பந்துவீச்சை எதிர்கொண்டனர். இரு அணி வீரர்களும் இதை செய்திருக்கின்றனர்.

நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர் பந்து நன்றாக டர்ன் மற்றும் பவுன்ஸ் ஆகும்போதும் ஸ்வீப் அடிக்க முயற்சிக்கிறார்கள். மற்றொருவர் ஸ்டம்பை நோக்கி வரும் பந்தை வித்தியாசமாக அடிக்க முயற்சித்து ஆட்டம் இழக்கிறார். இது இரண்டு அணிகளுக்கும் சரிவை கொடுத்தது.

குறிப்பாக சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிப்பாதி இருவரும் ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்தனர். அவர்களின் பேட்டிங் அணுகுமுறை மோசமாக இருந்தது.  நல்ல துவக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்தவில்லை. சரியான திட்டமிடல் இல்லாமல் தவறுதலாக ஷாட் விளையாடி வெளியேறினர்.” என விமர்சித்தார்.

Mohamed:

This website uses cookies.