தொடர் துவங்கும் முன்னே இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்த முன்னாள் நியுஸி வீரர்! 1

இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இரண்டையாவது நியூசிலாந்து கைப்பற்ற வேண்டும் என கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

நியூசிலாந்து இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்றிலும் படுதோல்வி அடைந்தது.

தொடர் துவங்கும் முன்னே இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்த முன்னாள் நியுஸி வீரர்! 2
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்துக்கு நேற்று இரவு இந்தியாவில் இருந்து புறப்பட்டு, இன்று ஆக்லாந்து சென்றடைந்தனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவண் காயம் காரணமாக இந்திய அணியுடன் செல்லவில்லை.

இதனால் பாஸ் பார்க் எடுக்க இந்தியாவுக்கு எதிராக இரண்டு தொடர்களையாவது வெல்ல வேண்டும் என முன்னாள் வீரர் கிரேக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரேக் மெக்மில்லன் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவில் படுதோல்வியை சந்தித்த பிறகு இந்தியா தொடர் மிகப்பெரியது. தற்போதுள்ள இந்திய அணி மிகவும் வலிமை மிக்கது. டெஸ்ட், டி20, ஒருநாள் என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் அவர்கள் திறமையாக எதிர்கொள்வார்கள். இதனால் இந்தத் தொடர் சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்தத் தொடரில் நியூசிலாந்து பாஸ் மார்க்கை எடுக்க இரண்டு தொடர்களையாவது வெல்ல வேண்டும்.

தொடர் துவங்கும் முன்னே இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்த முன்னாள் நியுஸி வீரர்! 3
ஒருநாள் போட்டிக்கான அணியில் இளம் வீரர் பிரித்வி ஷா, இடம் பெற்றுள்ளார். முதல்முறையாக ஒருநாள் அணிக்கு பிரித்வி ஷா அழைக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்டியா அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது,

ஐந்து டி20 கிரிக்கெட் தொடர் முதலில் தொடங்குகிறது. ஐந்து போட்டிகள் என்பதற்கு யாரும் சாதகமாக இருக்கமாட்டார்கள். ஆனால், அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், இந்த ஐந்து போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்’’ என்றார்.வ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *