ஹர்திக் பாண்டியாவின் பிட்னஸின் மிகப்பெரும் ரகசியம்!! வெளியான வீடியோ! 1

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் இளம் வீரரும், ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா, அதிரடி ஆட்டத்தில் மட்டுமின்றி உடலை கட்டுமஸ்த்தாக வைத்திருப்பதிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்திய அணியில் ஃபிட் ஆன வீரர்களில் கேப்டன் கோலிக்கு சவாலாக இருக்கும் ஒரு வீரர் என்றால் அது ஹர்திப் பாண்ட்யாதான். வேகமாக ஓடுவது, தூரமாக சிக்ஸர் விளாசுவது, சிக்ஸ் பேக் என உடற்கட்டில் அசத்துகிறார். இத்தகைய உடற்கட்டை அவர் எளிதில் பெற்றுவிடவில்லை. அதற்காக அவர் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.ஹர்திக் பாண்டியாவின் பிட்னஸின் மிகப்பெரும் ரகசியம்!! வெளியான வீடியோ! 2

இந்நிலையில் அவர் ஜிம்மில் காலுக்கு பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காலுக்கு சிரமப்பட்டு பயிற்சி எடுக்கும் ஹர்திக் பாண்ட்யா, ஒரு கட்டத்தில் பெண் பயிற்சியாளர் யாஸ்மின் கூறுவதையும் தாண்டி பயிற்சியை முடிக்கிறார். அத்துடன் மற்றொரு வீடியோவில் தனது சகோதரரும், இந்திய அணியின் வீரருமான குருனல் பாண்ட்யாவுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்.

ஹர்திக் பாண்ட்யா தனது உடற்கட்டை தக்க வைப்பதற்காக விழா நாட்கள் மற்றும் வாரக் கடைசியிலும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் பழக்கம் கொண்டவர். ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் ஓடும் போட்டியில், ஹர்திக் தோற்றது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

If it’s easy it’s not Pilates ? @yasminkarachiwala

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

 

 

இந்நிலையில்,

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 மற்றும் ஒரு நாள் தொடரை வென்று இந்திய அணி அசத்தி உள்ளது.

இந்திய அணி சிறந்த ஃபார்மில் உள்ளதால் டி20 மற்றும் ஒரு நாள் தொடரின் எந்த போட்டியிலும் தோல்வி பெறாமல் வெற்றியடைந்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தொடராக இந்த டெஸ்ட் போட்டி அமைந்துள்ளது.ஹர்திக் பாண்டியாவின் பிட்னஸின் மிகப்பெரும் ரகசியம்!! வெளியான வீடியோ! 3

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய அணியினருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் ப்ரையன் லாரா தனது வீட்டில் விருந்தளித்துள்ளார். இந்த விருந்தில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, சஹால். கேதர் ஜாதவ் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை மேற்கிந்திய வீரர் பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேற்கிந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கிறிஸ் கெய்ல், பொல்லார்டு, பிராவோ, சுனில் நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *