நாங்கள் ரோகித் சர்மாவை சீண்ட நினைத்தோம் என ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்
.இதுகுறித்து அவர் கூறியதாவது….
அவரை அவ்வப்போது சீண்டிக் கொண்டே இருந்தோம். நான் கேட்டேன் மிட் ஆனில் ஒரு பில்டரை வைத்தால் நீங்கள் தூக்கி அடிப்பீர்களா.. எனவும் ஐபிஎல் மோடிற்கு மாறி அதிரடியாக ஆடுவீர்களா எனவும் கேட்டேன் .ஆனால் அவர் அதை கண்டுகொண்டதே இல்லை என்று கூறினார் ஆரோன் பின்ச்.
2-வது நாளான இன்று ரோஹித் சர்மா விளையாடும்போது அவரைச் சீண்டியபடி இருந்தார் விக்கெட் கீப்பரும் ஆஸி. கேப்டனுமான டிம் பெயின். 
இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடக்கும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு தற்போதுவரை இந்திய அணி 375 ரன்களை எடுத்துள்ளது.
புஜாரா 100 , கோலி 82, மயங்க் அகர்வால் 76 ரன்கள் என ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தியதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு வலுவான இலக்கைத் தீர்மானிக்கும் நோக்கில் இந்திய அணி சென்றுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் ஆதிக்கத்தைத் தடுக்க ஆஸ்திரேலியா பல்வேறு முறைகளில் முயன்று வருகிறது. இந்திய அணி வீரர்களை கோபப்படுத்தும் முயற்சியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மாவிடம் ஆஸ்திரேலிய கேப்டனும் அந்த அணியின் விக்கெட் கீப்பருமான பெய்ன் ரோஹித் நீங்கள் சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுகிறேன் என்று கூறிச் சிரிக்கிறார்.
Aaron Finch discusses the IPL banter with skipper Tim Paine when Rohit Sharma was out in the middle #AUSvIND pic.twitter.com/wcuElzaHHE
— cricket.com.au (@cricketcomau) December 27, 2018
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் யாருக்கு என்னுடைய ஆதரவு என்பதில் குழப்பம் ஏற்படும். இப்போது ரோஹித் சர்மா சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறிவிடுவேன். நான் எல்லா அணிகளிடமும் விளையாடியுள்ளேன். நீங்களும் எல்லா அணிகளுடன் விளையாடியுள்ளீர்கள், பெங்களூரைத் தவிர.. என்று ரோஹித்தைச் சீண்டிப் பார்த்தார் பெயின்.
எனினும் இதனால் கோபமடைந்தோ அல்லது உற்சாகமடைந்தோ பந்துவீச்சைப் பதம் பார்க்க ரோஹித் சர்மா முயலவில்லை. ஏற்கெனவே டெஸ்ட் அணியில் இடம் இன்னும் நிரந்தரம் ஆகாததால் பக்குவமாக விளையாடி இந்திய அணி டிக்ளேர் செய்யும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ரோஹித் சர்மா.
இன்றைய ஆட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் இதுபற்றி கூறியதாவது:
ரோஹித் சர்மாவுடன் சிறிது நேரம் விளையாடிப் பார்த்தோம். மிட் ஆனை கொண்டுவந்தால் ஐபிஎல் நிலைக்கு மாறி சிக்ஸ் அடிக்கமுடியுமா என ரோஹித்திடம் நான் கேட்டேன். ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்.