வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா – ஒரே ஒரு டி20: எதிர்பார்க்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி

தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை அடுத்து, இரண்டு அணிகளும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளன. டி20 போட்டி விளையாடுவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்லுக்கு இடம் கிடைத்தது. டி20 சாம்பியன்ஸ் என்று அழைக்க படும் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 போட்டிகள் விளையாடினாலே, போட்டி விறுவிறுப்பாக இருக்கும். அதிலும், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் சில நட்சத்திர வீரர்கள் விளையாடினால், எதிரணியை நசுக்கி விடுவார்கள். ஆனால், இந்திய அணி ஒன்றும் சளைத்தது இல்லை.

சுனில் நரைன், கிரண் பொல்லார்ட், ஜெரோம் டெய்லர், எவின் லெவிஸ் மற்றும் கார்லோஸ் ப்ராத்வெயிட் ஆகியோர் அணியில் இருப்பார்கள். இது ஒரே ஒரு போட்டி என்பதால், நட்சத்திர வீரர்கள் சமீபத்திய பார்மை பார்க்காமல், அணியில் விளையாடுவார்கள்.

கடைசியாக இரண்டு அணியும் மோதிய போது தொடக்கவீரர் எவின் லெவிஸ் சதம் அடித்து அசத்தினார். வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமாக இருப்பதால், சுனில் நரைன் மற்றும் சாமுவேல் பத்ரீ ஆகிய இருவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

எதிர்பார்க்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியை பாருங்கள்:

கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ், மார்லன் சாமுவேல்ஸ், ஜேசன் முகமது, கார்லோஸ் ப்ராத்வெயிட், கிரண் பொல்லார்ட், சாட்விக் வால்டன், கேஷ்ரிக் வில்லியம்ஸ், சுனில் நரைன், சாமுவேல் பத்ரீ,ஜெரோம் டெய்லர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.