திருந்த மட்டாங்க போல… ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லை; அணியில் மீண்டும் அதிரடி மாற்றம்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !!

திருந்த மட்டாங்க போல… ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லை; அணியில் மீண்டும் அதிரடி மாற்றம்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

இந்திய அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது

பிரையன் லாரா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் விண்டீஸ் அணி, மூன்றாவது போட்டிக்கான ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யாமல் களமிறங்கியுள்ளது.

அதே வேளையில், தேவையற்ற மாற்றங்கள் செய்து கடந்த போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணியோ, மீண்டும் தேவையற்ற மாற்றங்களையே செய்துள்ளது.

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு மூன்றாவது போட்டியில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியாவே கேப்டனாகவே செயல்பட உள்ளார். இது தவிர உம்ரன் மாலிக் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜெயதேவ் உனாத்கட்டும், ருத்துராஜ் கெய்க்வாட்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி;

இஷான் கிஷன், சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜெயதேவ் உனாத்கட், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான விண்டீஸ் அணி;

பிராண்டன் கிங், கெய்ல் மெயர்ஸ், அலிக் அல்தனாசே, சாய் ஹோப், சிம்ரன் ஹெட்மயர், கார்டி, ரொமாரியோ, யானிக் சாரியக், அல்ஜாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சியல்ஸ்.

 

Mohamed:

This website uses cookies.