என்ன எழவுடா நடக்குது அங்க… கடும் வார்த்தைகளால் ஆஸ்திரேலியா வீரர்களை திட்டிய ஷேன் வார்ன்!!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பேர்ஸ்டோவ், ஹேல்ஸ் மிரட்ட இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இங்கிலாந்து வென்றது. மூன்றாவது போட்டி நாட்டிங்காமில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது.
மிரட்டல் துவக்கம்
இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தபோது, ஜேசன் (82) ஆட்டமிழந்தார். பின் இணைந்த பேர்ஸ்டோவ், ஹேல்ஸ் ஜோடி மிரட்டியது. ரிச்சர்ட்சன் பந்தை பேர்ஸ்டோவ் சிக்சருக்கு பறக்கவிட்டார். ஆன்ட்ரூ டை பந்துவீச்சில் ஹேல்ஸ் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். பேர்ஸ்டோவ் (139) சதம் கடந்தார். ரிச்சர்ட்சன் ‘வேகத்தில்’ பட்லர் (11) அவுட்டானார்.
ஹேல்ஸ் சதம்
எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த ஹேல்ஸ் (147) சதம் விளாசினார். தன் பங்கிற்கு கேப்டன் மார்கன் (67) அரை சதம் அடித்தார். மொயீன் அலி 11 ரன்கள் எடுத்தார். முடிவில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 481 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் (4), வில்லே (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ரிச்சர்ட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், இங்கிலாந்து அணி ஆண்களுக்கான ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.
உலக சாதனை
அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டியில் அதிக ரன் (481) குவித்து உலக சாதனை படைத்தது. தவிர, தனது முந்தைய சாதனையையும் (444/3, எதிர்– பாக்., நாட்டிங்காம், 2016) முறியடித்தது.
நழுவிய ‘500’
கடைசி கட்டத்தில் ஹேல்ஸ், கேப்டன் மார்கன் அவுட்டாகினார். இதனால், ரன் வேகம் குறைந்ததால் 500 ரன்களை எட்ட முடியாமல் போனது. தவிர, பெண்கள் ஒரு நாள் போட்டிக்கான உலக சாதனையை முறியடிக்கும் (நியூசிலாந்து அணி, 490 ரன், எதிர்– அயர்லாந்து, 2018) வாய்ப்பு நழுவியது.
இந்த போட்டிட்டில் முரட்டு அடி வாங்கிய ஆஸ்திரேலியா அணியை பார்த்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலியா ஜாம்பாவன் ஷேன் வார்ன்.
நேற்று அவர் லைவ் மேட்ச் பார்க்கவில்லை போலும்,
Just woke up and saw the score in England. What the hell happened over there & what is going on boys ? Gulp…..
— Shane Warne (@ShaneWarne) June 19, 2018
காலையில் எழுந்து மொபைல் போனில் பார்த்துள்ளார் ஷேன்,
இதனை பார்த்து காண்டான அவர், தனது ட்விட்டர் பக்கத்தில்,
இப்போது தான் எழுந்து இங்கிலாந்து ஆட்டத்தை பார்த்தேன். என்ன எழவுடா நடந்துருக்கு..? என்னடா பண்ணி வச்சிருக்கிங்க…
என ஆஸ்திரேலியா வீரர்களை திட்டுவது போல ஒரு பதிவிட்டுள்ளார்