அடுத்த ஐ.பி.எல் போட்டிகளுக்கான வேலைகலை தற்போது முடுக்கியுள்ளது பி.சி.சி.ஐ. தர்போது எப்போது ஐ.பி.எல் 11 தொடர் ஆரம்பமாகும் மற்றும் எப்போது முடியும் என அறிவித்துள்ளது ஐ.பி.எல் கமிட்டி.
அக்.24 ஆம் தேதி ஐ.பி.எல் நிர்வாக கமிட்டியின் கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தொடரில் இருந்து புதியதாக அனைத்து வீரர்களும் விடுவிக்கப்பட்டு ஏலத்தில் எடுக்கப்படுவர்.
இதுவரை ஐ.பி.எல் 11 தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்
- இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இருந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தொடரில் இணைந்துகொள்ளும்
- இதன் காரணமாக சேர்க்கப்பட்ட அணிகள் குஜராத் மற்றும் புனே அணிகளின் ஒப்பந்தம் முடிகிறது
- வீரர்களின் மறு ஏலம் காரணமாக, ஒவ்வொரு அணியும் தங்களது 3 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்
- அந்த மூன்று வீரர்களில் இரண்டு இந்தியா வீரர்களும், ஒரு வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்
தற்போது அடுத்தபடியாக ஐ.பி.எல் தொடர்மான கலந்துதுரையாடல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் இந்த கலந்துரையாடலில் 8 அணிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்களது வேண்டுகோள்களை வைப்பர்.
Photo by Shaun Roy – Sportzpics – IPL
முன்னதாக , கடந்த 10 வருட ஐ.பி.எல் தொடரின் டீ.வி ஒளிபரப்பு உரிமத்தை ‘சோனி’ தொலைகாட்சி கிட்டத்தட்ட 560 கோடிக்கு பெற்றிருந்தது. தற்போது நடந்த ஒளிபரப்பு உரிம ஏலத்தில் ஸ்டார், அமேசான், ஃபேஸ்புக் உள்ளிட்ட 24 சர்வதேச கார்பரேட்டுகள் கலந்து கொண்டன.
கடைசியாக, ஸ்டார் தொலைகாட்சி நிறுவனம் ₹ 16347.50 கோடிக்கு ஏலத்தியக் கைப்பற்றியது. இந்நிறுவனம் அடுத்த 5 வருடத்திற்கு ஒளிபரப்பு ஒப்பந்தட்தைப் பெற்றுள்ளது. சோனி தொலைகாட்சி இந்தியாவில் பெரிதும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. தற்போது ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியுள்ள ஸ்டார் தொலைகாட்சி நிறுவனம் விளையாட்டுப் போட்டிகளுக்கென்றே இந்தியாவின் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும், போட்டிகளில் புதிய புதிய தொழிலுட்பங்களைப் புகுத்தி புள்ளி விவரத்துடன் அவ்வப்போது சிறந்த தரத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் அடுத்த 5 வருடத்திற்கு ஐ.பி.எல் போட்டிகளைக் காண்பதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது.