இந்தியா 2003-04-ல் பாகிஸ்தான் சென்றிருந்தபோது என்னைப் பற்றி மியான்தத் கூறியது எனது தந்தைக்கு பிடிக்கவில்லை என்று இர்பான் பதான் விவரித்துள்ளார்.
கார்கில் போருக்குப்பின் இந்தியா 2003-04-ல் பாகிஸ்தான் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா டெஸ்ட் தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 3-2 எனவும் வென்றது.
இந்தத் தொடரின்போது பாகிஸ்தான் அணியில் தலைசிறந்த வீரர்கள் இருந்தனர். இந்தியாவில் இளம் வீரரான இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் இடம் பிடித்திருந்தார். புதுப்பந்தை ஸ்விங் செய்வதில் திறமை பெற்றிருந்தார்.

இருந்தாலும் பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் என்னைப் பற்றி பாகிஸ்தான் நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும் இர்பான் பதான் போன்று ஒவ்வொரு பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த கருத்தை எனது தந்தை விரும்பவில்லை என்று இர்பான் பதான் தற்போது விவரித்துள்ளார்.
இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில் ‘‘ஜாவித் மியான்தத் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் பதான் போன்ற பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். இந்த செய்தியை எனது அப்பா படித்தார். அவர் இந்த கருத்தை விரும்பவில்லை.
கடைசி போட்டியின்போது எனது அப்பா பாகிஸ்தான் வந்திருந்தார். அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்று மியான்தத்தை சந்திக்க இருக்கிறேன் என்றார். நீங்கள் அங்கே செல்வதை நான் விரும்பவில்லை என்றேன்.
ஆனால் மியான்தத் எனது தந்தையை பார்த்துள்ளார். நிலைமை புரிந்துகொண்ட மியான்தத், உங்களது மகனை மனதில் வைத்து நான் அப்படி கூறவில்லை என்று கூறியிருக்கிறார். அப்போது எனது தந்தை, நான் இங்கே வந்தது உங்களிடம் ஏதும் கூறவதற்காக இல்லை. உங்களை பார்க்க வேண்டும். நீங்கள் தலைசிறந்த வீரர் என்று தெரிவித்தார்’’ என்றார்.வ்