Ground எங்களோடது தான்… ஆனா தல தோனிக்கு வந்த சத்தம் காத கிழிச்சிருச்சு; ஓபனாக பேசிய பாட் கம்மின்ஸ் !!

Ground எங்களோடது தான்… ஆனா தல தோனிக்கு வந்த சத்தம் காத கிழிச்சிருச்சு; ஓபனாக பேசிய பாட் கம்மின்ஸ்

தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வந்த போது ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை போன்று தான் இதுவரை கேட்டதே இல்லை என ஹைதராபாத் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 18வது போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 45 ரன்களும், ரஹானே 35 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிசேக் சர்மா 37 ரன்களும், மார்கரம் 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.1 ஓவரில் இலக்கை இலகுவாக எட்டிய ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி நடப்பு தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வந்த ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை தான் இதுவரை கேட்டதே இல்லை என ஓபனாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாட் கம்மின்ஸ் பேசுகையில், “ஆடுகளம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. சிவம் துபே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். எனவே அவருக்கு எதிராக சில ஆஃப் – கட்டர்கள் வீச முடிவு செய்திருந்தோம். வெற்றியின் மூலம் இரண்டு புள்ளிகளை பெறுவது சிறப்பானது மற்றும் முக்கியமானது. போட்டியின் துவக்கத்தில் அபிசேக் சர்மா மற்றும் டர்வீஸ் ஹெட் ஆகியோருக்கு பந்துவீசுவது மிக மிக கடினம், பந்துவீச்சாளராக நானும் அதை விரும்ப மாட்டேன். ரசிகர்களின் ஆதரவு வியப்பளித்தது. தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வந்த போது ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை நான் இதற்கு முன் கேட்டதே இல்லை” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.