சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 17,600 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்கள் வீட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் தோனியின் மனைவி சாக்ஷி.
அதில், கவனத்தை ஈர்ப்பதற்காகப் படுக்கையில் உள்ள தோனியின் கால் விரல்களைக் கடிக்க முயல்வது போன்று பாவனை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாக்ஷி. தோனியை மிஸ்டர் ஸ்வீட்டி என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை தோனியின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்ந்து வருகிறார்கள்.
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார்.
கரோனா பாதிப்பால், 2020 ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. 2020 ஐபிஎல் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நடக்காமல் போனால் தோனியின் நிலைமை என்ன ஆகும் என்பதற்குப் பலரும் பலவிதமான கணிப்புகளை அளித்து வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் சர்வதேச அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை என்றால் இவரின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிடும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
உடற்தகுதி இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமண் தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்காக விளையாடலாம் என தெரிவித்துள்ளார். அதற்கான முழு உடற்தகுதியுடனும், மனபலத்துடனும் தோனி உள்ளார் என்றும் லட்சுமண் தெரிவித்துள்ளார்.’
இதுகுறித்து லட்சுமண் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரையில் இந்தாண்டு மட்டுமல்ல அடுத்த இரண்டு ஆண்டுகளும் தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடலாம். அதன்பிறகு அவரின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கலாம். தோனி தற்போதுவரை அதை சரியாக செய்து வருகிறார். அனைவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி விளையாடுவதை காண ஆர்வமாக உள்ளார்.வ்