பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட கோலி, அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த இவர் யார்? 1

டிசம்பர் 26 அன்று மும்பையில் நடைபெற்ற கோலி, அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரபலங்கள் எனப் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ரசிகர் ஒருவருக்கும் அழைப்பு சென்றிருந்தது.

டிசம்பர் 21 தில்லியில் நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் இந்த ஜோடி கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரபலங்களுக்காக தங்களது இரண்டாவது வரவேற்பு நிகழ்ச்சியைக் கடந்த செவ்வாய்க் கிழமை மும்பையில் கொண்டாடினர். இதில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் எனப் பலரும் பங்கு பெற்றனர். அந்தப் படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட கோலி, அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த இவர் யார்? 2

இந்நிலையில் நிகழ்விற்கு வந்த மாற்றுத் திறனாளி ஒருவருடன் அனுஷ்கா ஷர்மாவும், விராட் கோலியும் செல்ஃபி எடுத்துக் கொள்வதை போன்ற ஒரு புகைப்படமும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது. பலருக்கும் யார் இந்த நபர் என்கிற கேள்வி மனதில் எழுந்திருக்கும். அவரது பெயர் கயன் சேனநாயக், மாற்றுத் திறனாளியான இலங்கையைச் சேர்ந்த இவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். இலங்கை அணி எங்கு விளையாடச் சென்றாலும் அந்த இடத்திற்கே நேரில் சென்று அவர்களை ஊக்கப்படுத்துவார்.பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட கோலி, அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த இவர் யார்? 3

2007-ம் ஆண்டு அண்டர்-19 உலகக் கோப்பை போட்டியில் முதல் முதலில் கோலியை சந்தித்த இவர், அவரது ஆட்டத்தைப் பார்த்து கோலி வெறியராகவே மாறி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாகக் கோலியுடன் நெருங்கிய தொடர்பையும் இவர் வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையேயான போட்டிக்காக இந்தியா வந்திருந்த இவரைத் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார் விராட் கோலி.பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட கோலி, அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த இவர் யார்? 4

“விராட் கோலி ஒரு சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல ஒரு நல்ல கேப்டனும் கூட” என்று கயல் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். கொண்டாட்டத்தில் பங்கு பெற்ற கயல் சச்சின், ஜடேஜா, பும்ரா, அஸ்வின் உள்ளிட்ட பலருடனும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளார். விராட் கோலிக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் கோலி வெறியர்களுக்கு மத்தியில், அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இலங்கையைச் சேர்ந்த கயலுக்குக் கிடைத்துள்ளது.பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட கோலி, அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த இவர் யார்? 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *