Cricket, IPL 2018, Royal Challengers Bangalore, Virat Kohli, AB De Villiers, Yuzvendra Chahal

ஜெய்ப்பூரில் நேற்று மாலை நடந்த வாழ்வா, சாவா ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. ஓரளவிற்கு கட்டுக்கோப்பாகவே பந்துவீசியது பெங்களூரு.

ஆனால், சேஸிங் போது மிக மோசமாக சொதப்பியது ஆர்சிபி. அதுவும் , எட்டு ஓவர்களில் 75-1 எனும் சிறப்பான நிலையில் இருந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது எல்லாம் ஆர்சிபி பேன்ஸ், ‘நீங்க ஜெயிச்சதும் போதும்.. கப் வாங்குனதும் போதும்’-னு வெதும்பும் ரகம்.ஐபிஎல் 2018: தோல்விக்கு கோலியை காரணம் ஆக்குவது சரியா? 1

போட்டிக்கு பின் பேசிய விராட், “ஒரு விக்கெட்டுக்கு 75 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தோம். அதன் பிறகு இந்த மாதிரி விக்கெட்டுகளை மளமளவென இழந்தது எங்களுக்கு புதுமையாகவே தெரிந்தது.

டிவில்லியர்சின் பேட்டிங் நேர்த்தியாக இருந்தது. அவரைத் தவிர மற்றவர்கள் ஷாட்டுகளை தேர்வு செய்து அடித்த விதம் மோசமாக இருந்தது. இந்த தவறை 5-6 வீரர்கள் தொடர்ந்து செய்தனர். டிவில்லியர்ஸ் நன்றாக ஆடினாலும், அவருக்கு மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. களத்தில் நீடிக்கும் மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’என்றார்.ஐபிஎல் 2018: தோல்விக்கு கோலியை காரணம் ஆக்குவது சரியா? 2

கோலியால் இதைத் தான் சொல்ல முடியும். இப்படியொரு அணியை வைத்துக் கொண்டு வேறென்ன சொல்ல முடியும்?

நேற்றைய போட்டி முடிந்த பிறகு, சமூக தளங்களில் பலரும், ஏன்… ஆர்சிபி ஃபேன்ஸ் கூட முன் வைக்கும் விமர்சனம் இது தான். ‘கோலி தேவையில்லாமல் அதிகம் கோபப்படுகிறார். கோபம் தான் வருகிறதே தவிர, வெற்றி வருவதில்லை. இந்திய அணிக்கும், இதுபோன்று கேப்டன்ஷிப் செய்துவிடாதீர்கள் என்று!’.

ஐபிஎல் 2018: தோல்விக்கு கோலியை காரணம் ஆக்குவது சரியா? 3
Photo by Vipin Pawar/ IPL/ SPORTZPICS

கோலி கோபத்தைக் குறைத்துக் கொண்டு கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பது சரிதான். ஆனால், அணியின் மற்ற வீரர்களின் பங்களிப்பு Consistent-ஆக இல்லை. (டி , வில்லியர்ஸ் தவிர). 2017, 2018 சீசனில் தோல்விகளுக்கு இது தான் காரணம். டி காக், மெக்குல்லம் போன்றவர்கள் கூட கைக் கொடுக்கவில்லை. மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடிய போது, ஆர்சிபி Play-Off, Final என முன்னேறி இருக்கிறது. 2016 சீசனில் புனே அணியின் கேப்டனாக தோனியால் என்ன செய்ய முடிந்தது? (புனே Franchise-ல் தோனிக்கு ஆடவே பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம்). இருப்பினும், தோனி அந்த சீசனில் ஜீரோவாகிப் போனார். இந்திய அணியின் கேப்டனாக கோலியின் முகம் வேறு மாதிரியாக இருக்கும்.ஐபிஎல் 2018: தோல்விக்கு கோலியை காரணம் ஆக்குவது சரியா? 4

எவ்வளவு சொன்னாலும், ஒரு அணி தொடர்ந்து சொதப்பும் போது, கேப்டனால் விரக்தியை தான் வெளிப்படுத்த முடியும். ஒரேயொரு வித்தியாசம், தோனியிடம் அந்த விரக்தியை அடக்கி ஆளும் திறன் உள்ளது. தவிர, தோனியின் அவரது முகம் No Reaction வகையறாவில் வருகிறது. தோனியின் மனக் கட்டுப்பாடு, அவரது இயல்பான No Reaction முக அமைப்பு என இரண்டும் சேர்ந்து, அவரை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் கேப்டனாக அல்லது மனிதனாக வெளிக்காட்டுகிறது. ஆனால், கோலி இயல்பாக உணர்ச்சிகளை வெளிக்காட்டக் கூடியவர்.Royal Challengers Bangalore, Royal Challengers Bangalore Playing XI, Royal Challengers Bangalore XI, Gujarat Lions, Cricket, IPL 2017 இதனால், அவர் அடிக்கடி கோபப்படுவது போன்று நமக்கு தெரியும். ஆனால், உண்மையில் கோலி ‘மறப்போம்.. மன்னிப்போம்’ வகையைச் சேர்ந்தவர். உணர்ச்சிகளை உடனடியாக கொப்பளிப்பதால், உள்ளுக்குள் ஒன்றும் இருக்காது. தவிர, ஐபிஎல்லுக்கும், தேசிய அணிக்கும் உள்ள வித்தியாசம் கோலிக்கு மிக நன்றாகவே தெரியும். ஆகையால், இந்திய அணியை வழிநடத்துகையில் அவரிடம் கூடுதல் Mature நம்மால் பார்க்க முடியும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *