இந்த காரணத்தால் தான் ஹர்திக் பாண்டியாவை அணியில் எடுக்கவில்லை! தேர்வுக்குழு தலைவர் பதில் 1

தென் ஆப்பிரிக்க அணிக்கு டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா ஏன் இடம்பெறவில்லை என்ற காரணத்தை தற்போது தேர்வு குழு தலைவர் அறிவித்துள்ளார்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்காவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு, இளம் வீரர் ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிசி சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகள் நடைபெறும் இப்போட்டியில் 9 நாடுகள் பங்கேற்று 72 ஆட்டங்களில் மோதுகின்றன.

இந்தியா ஏற்கெனவே 2-0 என மே.இ.தீவுகளை வென்று 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸி, நியூஸி, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்டவையும் டெஸ்ட் தொடர்களில் ஆடி வருகின்றன.

இந்த காரணத்தால் தான் ஹர்திக் பாண்டியாவை அணியில் எடுக்கவில்லை! தேர்வுக்குழு தலைவர் பதில் 2
இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா பங்கேற்று ஆடுகிறது. இதற்கான இந்திய அணியை தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே.பிரசாத் அறிவித்துள்ளார். தேர்வுக் குழுக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. மே.இ.தீவுகளில் தொடக்க வீரராக இருந்து சோபிக்காத லோகேஷ் ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா குறித்து அவர் பேசியதாவது…

உள்ளூர் தொடரில் ஒரு வேகப்பந்து வீச்சு வீசும் ஆல்ரவுண்டர் இருப்பது அணிக்கு பயனில்லை என்று நினைக்கிறோம் . குறிப்பாக உள்ளூர் தொடரில் ஆடும்போது சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தினால் வெற்றி நமக்குத்தான். இதன் காரணமாக வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா எடுக்கவில்லை என்று கூறியுள்ளார் எம்எஸ்கே பிரசாத்.

 

கில் அபாரமாக ஆடியது, சீனியர்அணி தேர்வில் அவருக்கு உதவியுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத் கூறியதாவது:
தென்னாப்பிரிக்க அணியுடன் விஜயநகரத்தில் செப்டம்பர் 26 முதல் நடக்கவுள்ள போர்ட் பிரசிடென்ட் லெவன் அணிக்கு ஆட்டத்துக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். அதில் அவரது ஆட்டத்தை கூர்ந்து கவனிப்போம். ஒருநாள் ஆட்டங்களில் அவர் தொடர்ந்து நிலையாக ஆடி வருகிறார். டெஸ்ட் ஆட்டத்திலும் அது தொடருமா என்பதை பார்க்கலாம்.

இந்த காரணத்தால் தான் ஹர்திக் பாண்டியாவை அணியில் எடுக்கவில்லை! தேர்வுக்குழு தலைவர் பதில் 3
Hardik Pandya of India
(Photo by Action Foto Sport/NurPhoto via Getty Images)

 

ராகுல் கடந்த 18 மாதங்களில் பலமுறை வாய்ப்பு தரப்பட்டும், ஓரே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். அதனால் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
விவிஎஸ். லஷ்மண் அணியில் இருந்து நீக்கப்பட்டவுடன், மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 1400 ரன்களை விளாசி தன்னை நிரூபித்தார். ராகுலும் அதே போல் தன்னை நிரூபிக்க வேண்டும்.

ஷுப்மன் கில், பிரியங்க் பஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரும் தொடக்க வரிசை வீரர்கள் பட்டியலில் உள்ளனர். இந்திய நிலைக்கு ஏற்ப ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா சேர்க்க முடியாத நிலை உள்ளது. ரிஷப் பந்த்தின் ஆட்டம் தேர்வுக் குழுவின் பொறுமை சோதிப்பதாக உள்ளது. உமேஷ் யாதவ் தற்போதைக்கு ஏ அணியில் ஆடி வர வேண்டும் என்றார் பிரசாத்.இந்த காரணத்தால் தான் ஹர்திக் பாண்டியாவை அணியில் எடுக்கவில்லை! தேர்வுக்குழு தலைவர் பதில் 4

டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), மயங்க் அகர்வார், ரோஹித் சர்மா, சேதேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரித்திமன் சாஹா (விக்கெட் கீப்பர்கள்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *