இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது

போட்டிக்கான இரு அணிகளின்:

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, கலீல் அகமது, குல்தீப் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லஸ் பிராத்வெய்ட், கெமார் ரோச், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ்.

 

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடரை கைப்பற்றுவதில் இந்தியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. கடந்த ஆட்டத்தில் விராட் கோலியின் (120 ரன்) சதமும், 5-வது வரிசையில் ஆடிய ஸ்ரேயாஸ் அய்யரின் அரைசதமும் (71 ரன்) வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. இந்திய அணிக்கு 4-வது பேட்டிங் வரிசை தான் தீராத தலைவலியாக இருக்கிறது. அந்த இடத்திற்கு ஸ்ரேயாஸ் அய்யரை இறக்க வேண்டும், அதற்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அணி நிர்வாகம் இப்போதைக்கு ரிஷாப் பண்ட்டை தொடர்ந்து 4-வது வரிசைக்கு பயன்படுத்தும் என்று தெரிகிறது.

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானின் ஆட்டம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இந்த வெஸ்ட் இண்டீஸ் பயணத்தில் தவான் முறையே 1, 23, 3, 2 ரன் எடுத்து சொதப்பி உள்ளார். உலக கோப்பை கிரிக்கெட்டில் அசத்திய தவான், காயத்தில் இருந்து குணமடைந்து இந்த தொடருக்கு தான் திரும்பினார். இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு அவரது ஆட்டம் அமையவில்லை.

அடுத்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெறவில்லை. இதனால் இந்த பயணத்தில் தனது கடைசி ஆட்டத்தில் முத்திரை பதிக்க ஆர்வமாக உள்ளார். • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...