தீபக் சாஹர் அபார பந்துவீச்சு!! இந்தியாவிற்கு எளிதான இலக்கு!! 1

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு 147 ரன் இலக்கு நிற்னயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், நடந்து வருகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனால் மூன்றாவது போட்டியில் மூத்த வீரர்கள் சிலருக்கு ஒய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. மேற்கிந்தியத் தீவுகளை பொறுத்தமட்டில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் அந்த அணி களமிறங்குகிறது.

தீபக் சாஹர் அபார பந்துவீச்சு!! இந்தியாவிற்கு எளிதான இலக்கு!! 2

கயானா நகரில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், ராகுல் சாஹர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ரோகித் ஷ்ரமாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கேஎல் ராகுல், 2. ஷிகர் தவான், 3. விராட் கோலி, 4. ரிஷப் பந்த், 5. மணிஷ் பாண்டே, 6. குருணால் பாண்டியா, 7. வாஷிங்டன் சுந்தர், 8. தீபக் சாஹர், 9. புவனேஷ்வர் குமார், 10. ராகுல் சாஹர், 11. நவ்தீப் சைனி.

ரிஷப் பந்த் கடந்த இரு ஆட்டத்திலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல் பட தவறினார். முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் எடுத்த அவர், 2-வது ஆட் டத்தில் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஆட்டமிழந்தார். தோனி அணியில் இல்லாத நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக முன்னிலைப் படுத்தப்பட்டு வரும் அவர், சிறந்த திறனை வெளிப் படுத்த வேண்டிய கட்டாயத் துக்கு தள்ளப்பட்டுள்ளார்.தீபக் சாஹர் அபார பந்துவீச்சு!! இந்தியாவிற்கு எளிதான இலக்கு!! 3

பந்து வீச்சில் சகோதரர்களான தீபக் சாஹர், ராகுல் சாஹர் ஆகி யோர் இன்றைய ஆட்டத்தில் அறி முக வீரர்களாக களமிறங்க வாய்ப் புள்ளது. இவர்கள் களமிறங்கும் பட்சத்தில் நவ்தீப் சைனி, கலீல் அகமது, ரவீந்திர ஜடேஜா ஆகி யோரில் இருவர் வெளியே அமரவைக்கப்படக்கூடும்.

தொடரை நடத்தும் மேற்கிந் தியத் தீவுகள் அணியானது ஒருங் கிணைந்த செயல் திறனை வெளிப் படுத்துவது சவாலாக உள்ளது. டி 20 ஆட்டங்களில் வலுவான செயல் திறனை வெளிப்படுத்தும் அந்த அணி வீரர்கள் இம்முறை எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி னர். கெய்ரன் பொலார்டு, கேப்டன் கார்லோஸ் பிராத் வெயிட், எவின் லீவிஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரன் ஹெட்மையர் உள்ளிட்டோர் மட்டையை சுழற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும்.

இன்றைய ஆட்டத்தில் மேற் கிந்தியத் தீவுகள் அணி ஆறுதல் வெற்றியை பெறும் பட்சத்தில், அது அடுத்து நடைபெற உள்ள ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *