இந்த வருடமும் அப்ப்டித்தான் செய்வேன்: பேட்ஸ்மேன்களை மிரட்டும் அஸ்வின் 1

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடினாலும் மன்கட் அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அவுட் செய்வேன் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் செயல்பட்டார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் அஸ்வின் பந்துவீச வரும்போது அவர்கையில் இருந்து பந்து வெளியே செல்லும் முன் கீரீஸை விட்டு பட்லர் வெளியே சென்றதால், அஸ்வின் மன்கட் அவுட் செய்தார்.

ஐபிஎல் போட்டியில் கிங்ஸ்லெவன் அணியின் கேப்டன் அஸ்வின் மன்கட்அவுட் செய்தது, பெரும் சர்ச்சையானது. ரசிகர்கள் ஒருதரப்பினர் அஸ்வின் செய்தது சரி என்றும் மற்றொரு தரப்பினர் கிரிக்கெட்டின் மாண்புக்கும், தர்மத்துக்கும் மன்கட் அவுட் செய்யக்கூடாது, விதிமுறைகள்படி சரியென்றாலும், எச்சரித்து அதன்பின் அவுட் செய்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இந்த வருடமும் அப்ப்டித்தான் செய்வேன்: பேட்ஸ்மேன்களை மிரட்டும் அஸ்வின் 2

இந்நிலையில் 2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியிலிருந்து, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அஸ்வின் மாற்றப்பட்டுள்ளார். 13-வது ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாட உள்ளார்.

இந்தசூழவில் ட்விட்டரில் ஆகாஷ் என்ற ரசிகர் அஸ்வினிடம் மன்கட் அவுட் தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பினார்.

அதில், ” 2020-ம்ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளீர்கள், எந்த முக்கியமான பேட்ஸ்மேன்களை மன்கட் அவுட் செய்யப் போகிறீர்கள் என்று ஆகாஷ் கேள்வி எழுப்பினார்.

இந்த வருடமும் அப்ப்டித்தான் செய்வேன்: பேட்ஸ்மேன்களை மிரட்டும் அஸ்வின் 3
Ravichandran Ashwin captain of KXIP after takes a wicket of Jos Buttler of RR during match 4 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Rajasthan Royals and the Kings XI Punjab held at the Sawai Mansingh Stadium in Jaipur on the 25th March 2019
Photo by: Rahul Gulati /SPORTZPICS for BCCI

அதற்கு அஸ்வின் கிண்டலாக ” நான் பந்துவீசும் போது எந்த வீரர் கிரீஸை விட்டு வெளியே சென்றாலும் மன்கட் அவுட்செய்வேன்” என்று பதில் அளித்தார்.

கடந்த ஐபிஎல் சீசனில் அஸ்வினின் மன்கட் அவுட் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் உருவாக்கிய நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல்போட்டியிலும் மன்கட் அவுட் தொடரும் என அஸ்வின் கூறியிருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *