கோலியின் படைக்கு பயிற்சி அளிக்க நான் வருகிறேன்: உளரும் பாக் முன்னாள் வீரர் 1

இந்திய அணிக்குப் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக விரும்புவதாக ஷோயிப் அக்தர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர். இவர் வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்குப் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆவதற்கு ஆர்வமாக உள்ளதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர், “வாய்ப்பு கிடைத்தால் மிகவும் ஆக்ரோஷமான, வேகமான பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன்” என்று கூறியுள்ளார். அக்தர் அளித்துள்ள ‘ஹலோ’ நேர்காணலில் இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கோலியின் படைக்கு பயிற்சி அளிக்க நான் வருகிறேன்: உளரும் பாக் முன்னாள் வீரர் 2

எதிர்காலத்தில் இந்தியப் பந்துவீச்சு பிரிவுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, அவர் நேர்மறையான ஒரு பதிலைப் பதிலளித்துள்ளார். “நான் நிச்சயம் செய்வேன். அறிவைப் பரப்புவதே எனது வேலை. நான் என்ன அறிவை கற்றுக்கொண்டேனோ, அதைப் பரப்புவேன்” என்று அக்தர் கூறினார். தற்போதைய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் இருந்து வருகிறார். அந்தப் பணியைத்தான் அக்தர் விரும்புவதாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போதைய வீரர்களைக் காட்டிலும் அதிக ஆக்ரோஷமான, வேகம் நிறைந்த மற்றும் அதிகம் பேசக்கூடிய பந்து வீச்சாளர்களை நான் உருவாக்குவேன்” என்றும் வாக்குறுதி அளித்த அக்தர், வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களிடையே தனது அறிவைப் பகிர்ந்து கொள்ள எப்போதும் விரும்புவதாகவும், மேலும் ஆக்ரோஷமான பந்து வீச்சாளர்களை உருவாக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

கோலியின் படைக்கு பயிற்சி அளிக்க நான் வருகிறேன்: உளரும் பாக் முன்னாள் வீரர் 3
Sachin Tendulkar’s upper-cut for six off Pakistan pace spearhead Shoaib Akhtar during the 2003 World Cup is among one of the iconic sixes of his decorated career.

1998 தொடரில் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடிய தனது ஆரம்பகாலத் தொடர்புகள் குறித்தும் அக்தர் பேசினார். அப்போது , ” அந்த தொடரில்தான் நான் அவரைப் பார்த்தேன். ஆனால் அவருக்கு இந்தியாவில் பெரிய பெயர் உள்ளது எனக்குத் தெரியவில்லை. சென்னையில் விளையாடிய போது, சச்சின் இந்தியா கிரிக்கெட் கடவுளாக அறியப்பட்டார் என்பதை நான் அறிந்தேன். நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், அவர் என்னுடைய மிகச் சிறந்த நண்பர். 1998 ஆம் ஆண்டில், என்னால் முடிந்தவரை வேகமாகப் பந்து வீசியபோது, இந்திய மக்கள் என்னைக் கொண்டாடினர். எனக்கு இந்தியாவில் ஒரு பெரிய ரசிகர்கள் உள்ளனர்” என்று அக்தர் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *