நாங்கள் அரையிறுதிக்கு செல்ல இன்னும் ஒரு நல்ல வழி இருக்கிறது: பாக். கேப்டன் சர்பராஸ் அகமது பேச்சு 1

’அல்லாஹ் உதவி செய்தால் இன்றைய போட்டியில் அற்புதங்கள் நடக்கும்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்தார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இன்று நடக்கும் 43 ஆவது லீக் போட்டியில், பாகிஸ் தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால், இன் றைய போட்டியில் சில மேஜிக்குகள் நடக்க வேண்டும்.

நாங்கள் அரையிறுதிக்கு செல்ல இன்னும் ஒரு நல்ல வழி இருக்கிறது: பாக். கேப்டன் சர்பராஸ் அகமது பேச்சு 2

தற்போது 9 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 11 புள்ளிகளை பெறும். நியூசிலாந்து அணியும் 11 புள்ளிகளுடன் இருப்பதால், அரையிறுதி வாய்ப்பு ஒரு அணிக்கு ரன் ரேட் அடிப்படையில் வழங்கப் படும். நியூசிலாந்து, ரன் ரேட்டில் +0.175 ஆக இருக்கிறது. பாகிஸ்தானின் ரன் ரேட், -0.792 ஆக உள்ளது. நியூசிலாந்தின் ரன் ரேட்டை பாகிஸ்தான் முந்த வேண்டும் என்றால், இன்றைய போட்டியில் அதிசயங்கள் நடக்க வேண்டும்.

நாங்கள் அரையிறுதிக்கு செல்ல இன்னும் ஒரு நல்ல வழி இருக்கிறது: பாக். கேப்டன் சர்பராஸ் அகமது பேச்சு 3

அதாவது, பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து, 400 ரன்கள் எடுக்க வேண்டும். பங்களாதேஷை 316 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். பாகிஸ்தான் 350 ரன்கள் குவித்தால், பங்களாதேஷை 38 ரன்னில் சுருட்ட வேண்டும். அதோடு, டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால்தான் இந்த வாய்ப்பும். பீல்டிங் செய்துவிட்டால், சுத்தமாக அவுட்.

இந்நிலையில் இதுபற்றி பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, ‘’அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறவே வந்து ள்ளோம். இன்றைய போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற நினைக்கிறோம். அதற்காக முழுத் திறமையை யும் பயன்படுத்துவோம். ஆனால், யதார்த்த நிலையை உணரவேண்டும். அல்லாஹ் உதவி செய்தால், அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

நாங்கள் அரையிறுதிக்கு செல்ல இன்னும் ஒரு நல்ல வழி இருக்கிறது: பாக். கேப்டன் சர்பராஸ் அகமது பேச்சு 4
Pakistan could see even those remote hopes end without a ball being bowled if it loses the toss and Bangladesh chooses to bat, eliminating any chance for Pakistan to radically improve its net run-rate.

 

இந்த தொடரில், இந்த பிட்ச்-களில் 280 – 300 ரன்கள் வரைதான் குவிக்க முடிகிறது.  இங்குள்ள பிட்ச்கள் அதிக ரன் குவிக்கும்படி இல்லை. சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள,  கடினமாக இருக்கிறது. பந்து, பேட்டுக்கு வரவே இல்லை என்பதை குறிப்பிட வேண்டும். ஆஸ்திரேலிய அணியுடன் தோற்றதுதான் எங்களுக்குத் திருப்பு முனையாக அமைந்து விட்டது’’ என்றார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *