இந்த வெற்றிக்கு காரணம் ஷிகர் தவான் : சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் 1

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணி யின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் களமிறங்கினர்.

பிரித்வி ஷா 9 ரன்னில் அவுட்டானார். ஜேசன் ராய் 11 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன் எடுத்து அவுடானார். ரிஷப் பந்த் அதிரடியாக ஆடினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ரிஷப் பந்த் 128 ரன்கள் குவித்தார். ஹர்சல் பட்டேல் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.இந்த வெற்றிக்கு காரணம் ஷிகர் தவான் : சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் 2

சன் ரைசர்ஸ் வீரர்களின் பந்துவீச்சை பொளந்து கட்டிய டெல்லி வீரர் ரிஷாப் பந்த் 63 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டியில் ரிஷாப் அடித்தது 50-வது சதமாகும்.

டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்தார். தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 9 ரன்கள், ஜேசன் ராய் 11 ரன்களில் அடுத்தடுத்து சஹிப்அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.இந்த வெற்றிக்கு காரணம் ஷிகர் தவான் : சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் 3

அடுத்து வந்த ஸ்ரேயாஸும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ரிஷாப் பந்த், படேல் இருவரும் ஜோடி சேர்ந்தனர். படேல் பொறுமை காட்ட, ரிஷாப் பந்த் அதிரடியில் பட்டையைக் கிளப்பினார்.

கவுல் வீசிய 10-வது ஓவரில் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசினார் பந்த். சுழற்பந்துவீச்சில் மிரட்டி வரும் ராஷித்கான் வீசிய 12-வது ஓவரில் காட்டடி அடித்து 3 பவுண்டரிகள் விளாசினார் பந்த்.

சந்தீப் சர்மா வீசிய 13-வது ஒவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து 31-வது பந்துகளில் அரை சதம் அடித்தார் பந்த். சஹிப் அல் ஹசன் வீசிய 15-வது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் பவுண்டரி அடித்தார் பந்த்.

ராஷிக்கானின் 17-வது ஓவரில் மறுபடியும் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து அனல் பறக்க விட்டார் பந்த். புவனேஷ் குமார் வீசிய 18-வது ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடித்தார் பந்த். அதிரடியாக ஆடிய பந்த் 56 பந்துகளில் சதம் அடித்தார். அரை சதம் அடிக்க 31 பந்துகளை எடுத்துக்கொண்ட ரிஷாப் பந்த், அடுத்த 25 பந்துகளில் அடுத்த அரை சதத்தை அடித்தார் பந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக்கு காரணம் ஷிகர் தவான் : சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் 4புவனேஷ் வீசிய கடைசி ஓவரை காய்ச்சி எடுத்துவிட்டார் பந்த். முதல்பந்தில் மேக்ஸ்வெல் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த 5 பந்துகளைச் சந்தித்த பந்த் 2 பவுண்டரிகளையும், ஹாட்ரிக் சிக்ஸர்களையும் அடித்து ரசிகர்களுக்கு வானவேடிக்கை நிகழ்த்தினார். இதில் ஒரு சிக்ஸரை ஒற்றை கரத்தில் ரிஷாப் பந்த் பேட்டைப் பிடித்து அடித்தது முத்தாய்ப்பாகும்.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. ரிஷாப் பந்த் 63 பந்துகளில் 128 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் அடங்கும்.

அதிகபட்சமாக அணியில் புவனேஷ்குமார் 4 ஓவர்கள் வீசி 51ரன்களும், கவுல் 4 ஓவர்கள் வீசி 48 ரன்களும் வாரி வழங்கினர்.

 இந்த வெற்றிக்கு காரணம் ஷிகர் தவான் : சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் 5

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 187 ரன்களை டெல்லி அணி எடுத்தது.

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணி, 18.5 ஓவரில் 191 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஹேல்ஸ் 14 ரன்னில் அவுட்டானார். கேப்டன் வில்லியம்சன் 83 ரன்களும், தவான் 92 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

ஹைதராபாத் அணியின் இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *