ந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனையடுத்து ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
அதில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்தநிலையில் நாளை இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தொடரை வெல்ல வேண்டும் என்றால் மீதமுள்ள இரண்டு போட்டியிலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனையடுத்து ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
அதில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்தநிலையில் நாளை இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தொடரை வெல்ல வேண்டும் என்றால் மீதமுள்ள இரண்டு போட்டியிலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் அல்லது இவின் லீவிஸ், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ஜாசன் ஹோல்டர், கீமோ பால், ஹேடன் வால்ஷ், அல்ஜாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல்.