3 டி20 போட்டிகள் விளையாட பாகிஸ்தானுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரும் – நஜம் சேதி

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு வெஸ்ட் இண்டீஸ் வரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்தார். இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

கடந்த மாதம் ஷஹர்யார் கான் பதவியை வாங்கிய நஜம் சேதி, பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டை வரவைக்க பாடுபடுகிறார்.

“பாகிஸ்தானுக்கு சென்று மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் பேசிக்கொண்டிருக்கிறது,” என தகவல் வந்துள்ளது.

மறுபக்கம், உலக XI அணி பாகிஸ்தானுடன் டி20 போட்டி விளையாட பாகிஸ்தானுக்கு வருவது உறுதி ஆகிவிட்டது. அந்த தொடர் செப்டம்பர் 10ஆம் தேதி லாகூரில் நடக்கவுள்ளது.

“இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட ஒப்புக்கொண்டனர் ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்கள் அனுப்ப முடியாது என கூறியுள்ளது,” என சேதி கூறினார்.

2013 இல் இருந்து மூன்றாவது முறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆகிய சேதி, தன் பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாட மற்ற நாடுகளை அழைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.