லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆபாச இணையதளத்தை விளம்பரம் செய்ய முயன்ற பெண்ணைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியின் போது பெண் ஒருவர் ஆபாச இணையதளம் ஒன்றின் பெயர் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து மைதானத்தில் ஓட முயன்றார்.
அவரை தடுத்து பிடித்த மைதானக் காவலர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.
கடந்த மாதம் மாட்ரிட் நகரில் லிவர்பூல் மற்றும் டோட்டன்ஹோம் அணிகளுக்கிடையே சாம்பியன் லீக் இறுதிப் போட்டியின் போதும், இதே விட்டாலி அன்சென்சார்டு(vitaly uncensored) என்ற இணையதளத்தை விளம்பரப்படுத்த இதுபோன்ற சம்பவம் நடந்தது.
அந்தப் போட்டியின் போதும் இதே ஆபாச இணையதளம் பெயருடன் கூடிய நீச்சல் உடையுடன் பெண் ஒருவர் மைதானத்தில் ஓடினார். இந்தச் சம்பவம் இணையதளத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக அமைந்தது.
கடந்தமுறை, அந்த ஆபாச இணையதளத்தை இயக்கும் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கியின் பெண் நண்பர் தான் மைதானத்தில் நீச்சல் உடை உடன் வலம் வந்தார். தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் அத்துமீறி நுழைய முயன்ற எலொனா, அவரின் தாய்.
Failed streak attempt at the CWC final right infront of me. Advertising the same company as Champions League final streaker.
Stewards sadly too quick today …. pic.twitter.com/NFbwgNWG3M
— COYS NEWS (@Coys_News) July 14, 2019
My mom is crazy!!!!! pic.twitter.com/GuDfyM2aU2
— Vitaly Zdorovetskiy (@Vitalyzdtv) July 14, 2019
தனது மகனின் ஆபாச இணையதளத்திற்கு விளம்பரம் செய்யும் நோக்கில் அவர் ஓட முயன்றுள்ளார். இதனை விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்திள்ளார்.

242 என்ற இலக்கை எதிர்த்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அனுபவ வீரர் ஜோ ரூட் 30 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பேர்ஸ்டோவ் 36 (55) ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 71 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. தற்போது கேப்டன் இயான் மார்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து வருகின்றனர்.
