இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் 2022-ல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் ஆளப்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கு காமன்வெல்த் முக்கியத்துவம் அளித்துவருகிறது. காமன்வெல்த் நாடுகளிடையே நெருக்கம், தோழமை ஏற்படும் வகையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன.
அதன்படி 2022 காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடக்கிறது. இதில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது பரிமிங்காம் காமன்வெல்த்தில் பெண்கள் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கு 1998-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்தது. தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போது 24 வருடங்கள் கழித்து காமன்வெல்த்தில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
2022-ல் ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 7-ந்தேதி வரை கிரிக்கெட் நடைபெறும். இதில் 8 அணிகள் தங்கப் பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்தும்.
பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்று அழைக்கப்படும் இப்போட்டிகளில் முதல் போட்டிகள் கடந்த 1930-ம் ஆண்டு தொடங்கியது. போட்டிகளை நடத்துவதற்கான நகரங்களையும் காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு தேர்வு செய்கிறது
பிர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறும். 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி விதிமுறைகளை அமல்படுத்துவதில் ஐசிசி உதவியாக இருக்கும். 2022 ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை காமன்வெல்த் கேம்ஸ் 2022 நடைபெறவுள்ளது.

20 வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 50 ஓவர் ஆடவர் கிரிக்கெட் இடம்பெற்றது. தென் ஆப்பிரிக்கா தங்கமும் ஆஸ்திரேலியா வெள்ளியும் பெற்றன.
மேலும், கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக எம்சிசி அமைப்பின் உலக கிரிக்கெட் கமிட்டி தலைவர் மைக் கேட்டிங் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி மனு சாவ்னேவிடம் பேசிவருகிறேன். 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதில் அவர் நம்பிக்கையுடன் உள்ளார். இதன்மூலம் கிரிக்கெட்டுக்கு அதிகப் பலன்கள் கிடைக்கும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இரு வாரங்கள் ஒலிம்பிக் போட்டிக்காக ஒதுக்குவது சிரமம் இல்லை. நடாவின் கீழ் பிசிசிஐ வந்துள்ளதால் நமக்குச் சாதகமாகவே இருக்கும். அடுத்த 18 மாதங்களில் நல்ல முடிவு கிடைக்கும். அதேபோல 2022 காமன்வெல்த் கேம்ஸ் போட்டியில் மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்படவுள்ளது. 1998-க்குப் பிறகு கிரிக்கெட், காமன்வெல்த் கேம்ஸில் இடம்பெறவுள்ளது என்று கூறியுள்ளார்.