இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் 2022-ல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் ஆளப்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கு காமன்வெல்த் முக்கியத்துவம் அளித்துவருகிறது. காமன்வெல்த் நாடுகளிடையே நெருக்கம், தோழமை ஏற்படும் வகையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன.

அதன்படி 2022 காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடக்கிறது. இதில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது பரிமிங்காம் காமன்வெல்த்தில் பெண்கள் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு 1998-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்தது. தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போது 24 வருடங்கள் கழித்து காமன்வெல்த்தில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

2022-ல் ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 7-ந்தேதி வரை கிரிக்கெட் நடைபெறும். இதில் 8 அணிகள் தங்கப் பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்தும்.

 

பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்று அழைக்கப்படும் இப்போட்டிகளில் முதல் போட்டிகள் கடந்த 1930-ம் ஆண்டு தொடங்கியது. போட்டிகளை நடத்துவதற்கான நகரங்களையும் காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு தேர்வு செய்கிறது

பிர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறும். 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி விதிமுறைகளை அமல்படுத்துவதில் ஐசிசி உதவியாக இருக்கும். 2022 ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை காமன்வெல்த் கேம்ஸ் 2022 நடைபெறவுள்ளது.

England’s Anya Shrubsole, hidden, celebrates with team mates after bowling India’s Smriti Mandhana, right, during the ICC Women’s World Cup 2017 final match between England and India at Lord’s in London, England, Sunday, July 23, 2017. (AP Photo/Rui Vieira)

20 வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 50 ஓவர் ஆடவர் கிரிக்கெட் இடம்பெற்றது. தென் ஆப்பிரிக்கா தங்கமும் ஆஸ்திரேலியா வெள்ளியும் பெற்றன.

மேலும், கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக எம்சிசி அமைப்பின் உலக கிரிக்கெட் கமிட்டி தலைவர் மைக் கேட்டிங் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி மனு சாவ்னேவிடம் பேசிவருகிறேன். 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதில் அவர் நம்பிக்கையுடன் உள்ளார். இதன்மூலம் கிரிக்கெட்டுக்கு அதிகப் பலன்கள் கிடைக்கும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இரு வாரங்கள் ஒலிம்பிக் போட்டிக்காக ஒதுக்குவது சிரமம் இல்லை. நடாவின் கீழ் பிசிசிஐ வந்துள்ளதால் நமக்குச் சாதகமாகவே இருக்கும். அடுத்த 18 மாதங்களில் நல்ல முடிவு கிடைக்கும். அதேபோல 2022 காமன்வெல்த் கேம்ஸ் போட்டியில் மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்படவுள்ளது. 1998-க்குப் பிறகு கிரிக்கெட், காமன்வெல்த் கேம்ஸில் இடம்பெறவுள்ளது என்று கூறியுள்ளார். • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...