அடுத்த சீசனுக்காக ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டை ஒப்பந்தம் செய்தது ஒற்செஸ்டெர்ஷைர். தனது கவுண்டி கிரிக்கெட்டை ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் 15ஆம் தேதி அன்று நடக்கும் டி20 இறுதி நாள் வரை அவர் ஒற்செஸ்டெர்ஷைர் அணியுடன் இருப்பார். அந்த நேரத்தில் இங்கிலாந்து அணியுடன் விளையாட வேண்டிய ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கமாட்டார்.
ஒற்செஸ்டெர்ஷைர் தலைவர் டிம் கர்டிஸ், டிராவிஸ் ஹெட்டுடன் ஒப்பந்தம் செய்தததால் சந்தோசமாக இருக்கிறார். பிக் பாஷ் லீக் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாடினார்.
“பிக் பாஷ் லீக் தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரிக்கேர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அரையிறுதி போட்டி மற்றும் இறுதி போட்டிகளில் அட்டகாசமாக விளையாடி கோப்பையை தட்டி சென்றார். அதன் பிறகு இங்கிலாந்துடன் நடந்த ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல் பட்டார். ஆனால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட ஆசை படுகிறார். இதனால், அவரையும் மற்றும் இளம் ஆஸ்திரேலிய வீரர்களையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த சம்மருக்கு இங்கு அனுப்புகிறார்கள்,” என டிம் கர்டிஸ் கூறினார்.
“அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக செயல் பட வேண்டும் என ஹெட் விரும்புகிறார், இதனால் ஒற்செஸ்டெர்ஷைரில் இணைந்தார். பேட்டிங்கில் மட்டும் இல்லாமல், சுழற்பந்து வீச்சையும் முன்னேற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்,” என அவர் மேலும் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
2016ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது தான் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகம் ஆனார். இது வரை அவர் 34 ஒருநாள் போட்டிகளிலும் 10 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடி, 1200 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் அவர் 6 சதங்களுடன் 3729 ரன் அடித்திருக்கிறார்.