இவரை மட்டும் முன்னரே களமிறக்கிவிட்டால் இங்கிலாந்து அணியை கோப்பையை வெல்வதை தடுக்கவே முடியாது: சோயப் அக்தர் அட்வைஸ் 1

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கணித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இதில் லீக் சுற்று முடிந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரை யிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதிய இந்திய அணியும், இரண்டாம் அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதிய ஆஸ்திரேலிய அணியும் தோல்வி அடைந்தன. இவரை மட்டும் முன்னரே களமிறக்கிவிட்டால் இங்கிலாந்து அணியை கோப்பையை வெல்வதை தடுக்கவே முடியாது: சோயப் அக்தர் அட்வைஸ் 2

 

இதையடுத்து இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இந்தப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. உலக கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்ற தில்லை என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கணித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘’இங்கிலாந்து அணி டாஸ் வென்றால், அதிக ரன்களை குவிக்கும். மார்டின் கப்திலும் ஹென்றி நிக்கோலஸும் நியூசிலாந்துக்கு சரியான அடித்தளம் அமைத்துக்கொடுக்க வேண்டும். அனைத்து வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நான் நியூசிலாந்து அணியை ஆதரிக்கிறேன். ஆனால், இங்கிலாந்து கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

இவரை மட்டும் முன்னரே களமிறக்கிவிட்டால் இங்கிலாந்து அணியை கோப்பையை வெல்வதை தடுக்கவே முடியாது: சோயப் அக்தர் அட்வைஸ் 3

இதுபோன்ற பெரிய போட்டிகளில் நெருக்கடி முக்கிய அங்கம் வகிக்கும். இங்கிலாந்து பெரிய அணியாக இருக்கிறது. அந்த அணி, லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனைப் படைக்கும் என்று நினைக்கிறேன். அந்த அணியில் பட்லரை கொஞ்சம் முன்னதாகவே களமிறக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் அவர் அதிகமான ரன்களை குவிப்பார்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிரடி பேட்ஸ்மேன்கள்

இங்கிலாந்தின் பிரதான பலமே மின்னல்வேக பேட்டிங் தான். தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோவும், ஜாசன் ராயும் அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர். இவர்கள் இந்த உலக கோப்பையில் 4 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்து பிரமாதப்படுத்தியுள்ளனர். ஜோ ரூட் (549 ரன்), கேப்டன் இயான் மோர்கன் (362 ரன்), பென் ஸ்டோக்ஸ் (381 ரன்), ஜோஸ் பட்லர் (253 ரன்) ஆகியோரும் இங்கிலாந்தின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் (13 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர் (19 விக்கெட்), மார்க் வுட் (17 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் (11 விக்கெட்) மிரட்டுகிறார்கள். இதே கூட்டணி தான் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவின் 3 விக்கெட்டுகளை முதல் 7 ஓவர்களுக்குள் வீழ்த்தி திணறடித்தது.இவரை மட்டும் முன்னரே களமிறக்கிவிட்டால் இங்கிலாந்து அணியை கோப்பையை வெல்வதை தடுக்கவே முடியாது: சோயப் அக்தர் அட்வைஸ் 4

லீக் சுற்றில் மிடில் கட்டத்தில் கொஞ்சம் தள்ளாடினாலும் அதன் பிறகு வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிகளை அள்ளிய இங்கிலாந்து அணி, அதே ஆக்ரோ‌ஷத்துடன் இறுதிப்போட்டியையும் எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது. உச்சக்கட்ட நெருக்கடிக்கு மத்தியில் விளையாடும் போது, முக்கியமான தருணத்தில் பதற்றமின்றி திறம்பட சமாளிக்கும் பட்சத்தில் இங்கிலாந்தின் கையில் உலக கோப்பை தவழ்வதை தடுக்க முடியாது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *