நியூசிலாந்து
தொடக்க அதிரடி, நிலைத்து நிற்கும் மிடில் ஆர்டர், லோ ஆர்டரில் சிக்சர்களை விளாசும் பேட்டிங் ஆல் ரவுண்டர்ஸ், லைன் அன்ட் லென்த் ஃபேஸ் பவுலர்ஸ் , டீசன்ட் ஸ்பின் ஆப்ஷன் என்று மிக்ஸிங் பிரமாதமாக உள்ளது. பயிற்சிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்தியாவை டோட்டலாக வீழ்த்திய நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது. கேன் வில்லியம்சன் எனும் பதட்டப்படாத கேப்டன் இவர்களில் கூடுதல் பிளஸ்.
மோஸ்ட் சீனியர் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் போட்டி நடைபெறும் நாளன்று நிலைத்து ஆடிவிட்டால் போதும், மற்றதை மற்ற வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள். வெற்றி எளிதில் வசப்படும்.