ஆஸ்திரேலியா
டேவிட் வார்னர்,ஸ்டீவன் ஸ்மித், ஆகிய இவ்விரு வீரர்களின் வருகைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் ‘நேர் கொண்ட பார்வை’-க்கு 90 டிகிரி ஆங்கிள் கிடைத்திருக்கிறது. அதன் முதல் எதிரொலியை இங்கிலாந்துக்கு எதிரான பயற்சிப் போட்டியில் ஸ்மித்தின் சதம் மூலம் நம்மால் காண முடிந்தது. அந்தப் போட்டியில் மெகா பலம் பொருந்திய இங்கிலாந்தையும் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
கேப்டன் ஆரோன் ஃபின்ச்சின் ஃபார்ம் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் ஒரே சிக்கல். ஐபிஎல்-ல் ‘rash driving’ நடத்திய டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ‘X Factor’ மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரே என்று பேட்டிங்கில் பலம் காட்டும் ஆஸி., மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்சன், ‘பவுன்ஸ்’ பெஹ்ரென்டோர்ஃப், கோல்டர் நைல், நாதன் லயன், ஆடம் ஜம்பா என்று பலம் வாய்ந்த பென்ச்சை களமிறக்கியுள்ளது.