வெஸ்ட் இண்டீஸ்
க்றிஸ் கெயில், ஷாய் ஹோப், எவின் லெவிஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், ஆந்த்ரே ரசல், கார்லஸ் பிரத்வெயிட், நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் எனும் மெகா பேட்டிங் லைன் அப்-ஐ களமிறக்கியுள்ளது. மேற்கு இந்தியர்கள் சிக்ஸர்கள் மட்டுமே அடிப்பார்கள், சிங்கிள்ஸ் எடுக்க தெரியாது, அணியின் சரிவை தடுத்து நிறுத்தத் தெரியாது என இம்முறை கூற முடியாது. ஷாய் ஹோப், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர்… ஏன் க்றிஸ் கெயிலே இப்போது சூழ்நிலைக்கு ஏற்ப ஆடத் துவங்கிவிட்டார். ஐபிஎல்-லையும் கடந்து ஆந்த்ரே ரசலின் காட்டடி உலகக் கோப்பையிலும் தொடர்கிறது.
பந்துவீச்சிலும் பலமாக இருந்தாலும், தாறுமாறான பவுன்ஸ், லைன் அன்ட் லென்த் இல்லாத ஃபேஸ் இவர்களின் பலவீனமே, பட், அதை பேட்டிங்கில் ஓவர்டேக் செய்துவிடுகிறார்கள்.