உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பது கனவு போன்றது: ரிஷப் பன்ட் 1

உலகக்கோப்பை அணியில் நான் இடம்பிடித்தால் கனவு நனவாகப் போகிறது என்பதைப் போல் உணர்வேன் என ரிஷப் பண்ட் பேசியுள்ளார்.

2019 மே 30ம் தேதி முதல் ஜூலை 14, 2019 வரை ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் வித்தியாசம் என்னவெனில் 1992 உலகக்கோப்பை போல் 10 அணிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆட வேண்டும்.

இதில் முதல் 4 இடங்களுக்கு வரும் அணிகள் அரையிறுதியில் விளையாடும்.

அணிகள் விவரம்: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், மற்றும் வெஸ்ட் இண்டீஸ்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி, வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பது கனவு போன்றது: ரிஷப் பன்ட் 2

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், மே 30ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணி வீரர்கள் அடங்கிய பட்டியல் வரும் 23ஆம் தேதிக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எனவே அணி வீரர்கள் தேர்வு தொடர்பாக, ஏப்ரல் 15ஆம் தேதி மும்பையில் பிசிசிஐ கூட்டம் நடைபெறுகிறது.

இதில் இந்திய அணி தேர்வுக் குழுவினர், கேப்டன் விராட் கோலி ஆகியோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தைத் தொடர்ந்து 15 வீரர்களைக் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு பறிபோகலாம். ஆனால், ரோகித் சர்மாவின் காயம் குறித்து அணி நிர்வாகம் எந்தவித அறிவிப்பும் செய்யவில்லை.உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பது கனவு போன்றது: ரிஷப் பன்ட் 3

போட்டி அட்டவனை மற்றும் ஆட்டம் தொடங்கும் இந்திய நேர விவரங்கள்:

ஜூன் 5* (புதன்) – தென் ஆப்பிரிக்கா – இந்தியா – சவுதாம்ப்டன் – மதியம் 3 மணி.

ஜூன் 9* (ஞாயிறு) – இந்தியா – ஆஸ்திரேலியா – தி ஓவல் – மதியம் 3 மணி

ஜூன் 13* (வியாழன்)- இந்தியா – நியூஸிலாந்து – நாட்டிங்காம் – மதியம் 3 மணி

ஜூன் 16* (ஞாயிறு) – இந்தியா – பாகிஸ்தான் – மான்செஸ்டர் – மதியம் 3 மணி

ஜூன் 22* (சனி) – இந்தியா – ஆப்கானிஸ்தான் – சவுத்தாம்டன் – மதியம் 3 மணி

ஜூன் 27* (வியாழன்) – இந்தியா – மே.இ.தீவுகள் – மான்செஸ்டர் – மதியம் 3 மணி

ஜூன் 30* (ஞாயிறு) – இந்தியா- இங்கிலாந்து – பர்மிங்ஹாம் – மதியம் 3 மணி

ஜூலை 2* (செவ்வாய்) – இந்தியா – வங்கதேசன் – பர்மிங்ஹாம் – மதியம் 3 மணி

ஜூலை 6* (சனி)  – இந்தியா – இலங்கை – லீட்ஸ் – மதியம் 3 மணி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *