உலக XI அணி பாகிஸ்தான் வருகை!! 1

உலக XI அணி பாகிஸ்தான் வருகை!!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 12 தொடங்கும் 3 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாட டுபிளெசிஸ் தலைமை உலக லெவன் அணி லாகூருக்கு பலத்த பாதுகாப்புகளுக்கிடையே வந்தது.

இன்று காலை அல்லமா இக்பால் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 5 நட்சத்திர விடுதிக்கு உலக அணி வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்,

வரும் வழியெல்லாம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அணி வீரர்கள் பேருந்து வரும் பாதையை எட்ட முடியாமல் போக்குவரத்து மூடப்பட்டிருந்தது.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு இல்லை என்று ஏற்கெனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.

உலக லெவன் அணி
  • டுபிளெசிஸ் (கேப்டன்), ஷஷிம் ஆம்லா, கொலின் மில்லர், இம்ரான் தாஹிர், மோர்னி மோர்கெல், ஜார்ஜ் பெய்லி, டிம் பெய்ன், பென் கட்டிங், தமிம் இக்பால், திசரா பெரேரா, கிராண்ட் எலியட், பால் காலிங்வுட், டேரன் சமி, சாமுவேல் பத்ரீ

கடந்த மார்ச் 2009-ல் இலங்கை அணியினர் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் விளையாட அணிகள் அச்சம் தெரிவித்து தவிர்த்து வந்தன.

இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது.

அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணி மட்டும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

தற்போது பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் தொடங்குவதற்கான காலம் கனிந்துள்ளது. ஐ.சி.சி. உலக லெவன் அணியை பாகிஸ்தான் அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் – ஐ.சி.சி. உலக லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டது.

உலக XI அணி பாகிஸ்தான் வருகை!! 2

அதன்படி முதல் போட்டி நாளை தொடங்குகிறது. 2-வது போட்டி 13-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 15-ந்தேதியும் நடக்கிறது.

மூன்று போட்டிகளும் லாகூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான உலக லெவன் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அணி கடந்த சில தினங்களாக துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 13 வீரர்கள் பாகிஸ்தான் சென்றடைந்தனர்.

பாகிஸ்தான் சென்றடைந்த அவர்கள் வரலாறு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

உலக XI அணி பாகிஸ்தான் வருகை!! 3

போட்டி நடைபெறும் மைதானத்திற்கும் வீரர்கள் தங்கும் ஹோட்டலுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் உள்பட 9 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

உலக XI அணி பாகிஸ்தான் வருகை!! 4

இந்த தொடர் வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணி ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட ஒப்புக் கொண்டுள்ளது.

மே, 2015-ல் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் விளையாடிய போது கூட ஐசிசி ஆட்ட நடுவர்கள், களநடுவர்களை அனுப்ப மறுத்து விட்டது.

ஆனால் பாகிஸ்தானுக்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் திரும்பும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த உலக லெவன், பாகிஸ்தான் இடையேயான போட்டி ஐசிசி ஆதரவுடன் நடைபெறுகிறது.

நாளை, செப்.12-ம் தேதி உலக XI முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. 13 மற்றும் 15-ம் தேதிகளில் மற்ற 2 டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டிகள் லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெறுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *