அஸ்வினுக்கு இடம் இல்லை, டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த கேப்டன் ரோஹித் சர்மா !!

அஸ்வினுக்கு இடம் இல்லை, டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த கேப்டன் ரோஹித் சர்மா..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

 

சர்வதேச டெஸ்ட் தொடருக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 2021-2023 நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய அணியும் மற்றும் இந்திய அணியும் மோதுகின்றன.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரவி அஸ்வின் மற்றும் இஷான் கிஷனுக்கு இடம் கிடைக்கவில்லை. அணியின் சுழற்பந்து வீச்சாளராக நட்சத்திர வீரர் ஜடேஜாவிர்க்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ்,முகமது ஷமி, சர்துள் தாகூர் மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர். பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரோஹித் சர்மா,சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே மற்றும் k.s பரத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில், பேட்ஸ்மென்கள் வரிசையில்,உஸ்மான் கவாஜ, டேவிட் வார்னர், மர்னஸ் லபுசேன்,ஸ்டீவ் ஸ்மித் டிராவிஸ் ஹெட், மற்றும் அலெக்ஸ் கேரி இடம்பெற்றுள்ளனர்.மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் காயம் காரணமாக ஓய்வில் உள்ள ஹசல்வுட்டிர்க்கு பதில் ஸ்காட் போலன்ட் இடம்பெற்றுள்ளனர்.மேலும் அணியின் சுழற் பந்து வீச்சாளராக நாதன் லியொன் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணியின் பிளேயிங் 11..

ரோகித் சர்மா(c), சுப்மன் கில்,புஜாரா, விராட் கோலி,அஜின்கியா ரஹானே,K.s பரத்(wk), ஜடேஜா, சர்துல் தாகூர், உமேஷ் யாதவ்,முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் 11..

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா,ஸ்டீவ் ஸ்மித், மர்னஸ் லபுசேன், டிராவிஸ் ஹெட்,அலெக்ஸ் கேரி(wk),கேமரூன் கிரீன், பேட் கம்மின்ஸ் (c), மிட்சல் ஸ்டார்க்,நாதன் லியொன், ஸ்காட் போலன்ட்.

Mohamed Ashique:

This website uses cookies.