WWE செய்தி : WWE ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜேம்ஸ் எல்லிஸ் வொர்த்

ஒரு வருடத்திற்கு முன்னர் இதே சமயத்தில் திடீரென ஒரு போட்டியில் நுழைந்து ப்ரூவன் ஸ்ராமேன்க்கு எதிரான போடட்டில் கலக்கியவர் ஜேம்ஸ் எலிஸ்வொர்த். அந்த சமயத்தில் ஒரு லோக்கல் வீரனாக இருந்து பல போட்டிகளை வென்றெடுத்தார் எல்லிஸ்வொர்த்.

அதே போன்று ஒரு போட்டியில் அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் இருந்து வந்த எல்லிஸ்வொர்த்,  ஒரு அற்புதமான RAW போட்டில் களமிறங்கி அசத்தினார் எல்லிஸ்வொர்த். அந்த ஒரு இரவில் அவர் ரிங்கில் ஆடிய ஆட்டம் அனைவரது கவனத்தையும் அவர் பக்கம் ஈர்த்தார் எல்லிஸ்வொர்த். பின்னர் அடுத்தபடிக்கு முன்னேறி ஸ்மாக் டவுனிற்கு சென்று  சில போட்டிகளில் அருமையாக ஆடினார். அதில் பல போட்டிகளில் தோற்று தான் போனார். இருந்தும், அவருடைய கேளிக்கைக்காகவும், அவரது சேட்டைகள் மறூர்ம் முக பாவனைகளுக்காகவும் ஸ்மாக் டவுனில் ஒப்பந்தம் பெற்றார்.

இதிலிருந்து ஒவ்வொரு முறை ரிங்கிற்குள் வரும் போது விதயாசமான முறையில் ரசிகர்களைக் கவரும் வண்ணம் விளம்பரமாக வருவார். மேலும், டீன் ஆம்புரோஸ் மற்றும் ஏ.ஜீ ஸ்டைல்ஸ் ஆகியோரப் போல் சில கதை வைத்து அனைவரையும் என்டர்டைன் செய்தார். இப்படியே போக ஸ்மாக் டவுனில் அடுத்தடுத்து 3 போட்டிகளிய வென்று அசத்தினார் ஜேம்ஸ் எல்லிவொர்த்.

பின்னர், டி.எல்.சி ஆட்டத்தில் டீன் அம்புரோசை ஏமாற்றி கார்மெல்லாவுன் ஜோடி சேர்ந்துவிட்டார் . அவருடன் சேர்ந்த  பின்னர் மிஸ் மனி இன் த பேங்க் வெற்றி பெற்று காமெரெல்லாவிற்கு கொடுத்துவிட்டார்.

இப்படியே தனது WWEல் தனது ஒரு வருடத்தைக் கழித்த ஜேமஸ் எல்லிஸ்வொர்த் தற்போது ஸ்மாக் டவுனின் ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்க்த்தில் அறிவித்துள்ளார் ஜேம்ஸ்.

கடந்த வாரத்தில் ஆண்-பெண் போட்டியில் காமெரெல்லவுடன் சேர்ந்து பெக்கி பென்சுக்கு எதிராக சண்டையிட்டார். ஆனால், காமரெல்ல இவரை கீழே தள்ளி தலையில் உதைத்து சாய்த்து த்ரோகம் செய்துவிட்டார்.

Editor:

This website uses cookies.