WWE செய்தி: ரா & ஸ்மாக்டவுன் தொடர்ந்து சர்வைவர் சீரிஸ் தொடர் அட்டையும் புதிப்பிக்கப்பட்டது

டி.எல்.சி பி.பி.வி முடிந்த அன்று இரவு சர்வைவர் சீரிஸ் தொடர் அட்டை அறிவிக்கப்பட்டது.

பிராண்ட் vs பிராண்ட் பின்னணியிலான நிகழ்வாக இருந்தாலும், ஒரு பக்கம் இருக்கும் சாம்பியன்ஸ் இன்னொரு அணியில் இருக்கும் சாம்பியன்ஸுடன் மோத வேண்டும். ஆனால், இந்த போட்டிகள் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததால், பல மாற்றங்கள் நடந்தன. எனவே, போட்டிக்கான அட்டைக்கு நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன.

பி.பி.வி நிகழ்வின் கடைசி வாரம் இது, இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று வெளியாகும். எனவே, இந்த வாரம் ரா மற்றும் ஸ்மாக் டவுன் லைவ் தொடர்ந்து, ஆண்டின் கடைசி இரட்டை பிராண்டு PPV இன் இறுதிப் போட்டிக்கான அட்டையை நாங்கள் பெற்றுள்ளோம்.

இந்த வார WWE ரா போட்டியில் ட்ரிபிள் எச் மீண்டும் வருவதாக கூறியுள்ளார், இதனால் இந்த வரிசையில் மிக பெரிய மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. ஜேசன் ஜோர்டானுக்கு அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரின் தந்தை குர்ட் அங்கிள் குழப்பத்தில் இருக்கிறார். ஆனால், ரா அணியில் ஜோர்டானுக்கு பதிலாக நுழைந்து விட்டார் குர்ட் அங்கிள்.

ரா அணியில் ட்ரிபிள் எச்-உம் மீண்டும் வருவதால், இந்த அணி பலமாக காட்சி அளிக்கிறது. மகளிர் சாம்பியன்ஸ் போட்டியில் நடால்யாவை சார்லோட்டே பிளேர் வீழ்த்திய போது, ஸ்மாக் டவுன் லைவில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்த வெற்றியின் காரணமாக, பெண் பிரிவில் இருந்து சாம்பியன் எதிராக சாம்பியன் போட்டியில் மாற்றப்பட்டது. இந்த ஞாயிற்றுக்கிழமை அலெக்சா பிலீஸ்சுடன் மோதுவார் சார்லோட்டே பிளேர். அது கூறப்படுவதன் மூலம், இது சர்வைவர் தொடர் 2017 இன் இறுதி போட்டிக்கான அட்டையாகும்:

பாரம்பரிய 5-ல் -5 சர்வைவர் தொடர் எலிமினேஷன் போட்டி:

ரா அணி – கேப்டன் குர்ட் ஆங்கிள், பிரான் ஸ்ட்ரோமேன், பின் பலோர், சமோவா ஜோ, ட்ரிபிள் எச் vs ஸ்மாக் டவுன் அணி – கேப்டன் ஷேன் மெக்மோகன், ராண்டி ஓர்டன், பாபி ரூடே, சின்சுக்கே நகமுரா, ஜான் சீனா.

பாரம்பரிய 5-ல் -5 சர்வைவர் தொடர் எலிமினேஷன் போட்டி:

ரா அணி – கேப்டன் அலிசியா பாக்ஸ், நியா ஜாக்ஸ், அசுகா, சாஷா பேன்க்ஸ் vs ஸ்மாக் டவுன் அணி – கேப்டன் பெக்கி லின்ச், கார்மெல்லா, தாமினா ஸ்னுக்கா, நவோமி, லானா (உறுதி செய்யவேண்டும்)

ரா vs ஸ்மாக் டவுன்; சாம்பியன் vs சாம்பியன் போட்டிகள்

WWE யுனிவர்சல் சாம்பியன் ப்ரோக் லெஸ்னர் vs WWE சாம்பியன் ஏ.ஜே. ஸ்டைலஸ்

WWE இண்டர் கான்டினென்டல் சாம்பியன் தி மிஸ் vs WWE யூனிடேட் ஸ்டேட்ஸ் சாம்பியன் பரோன் கார்பின்

ரா மகளிர் சாம்பியன் அலெக்சா ப்ளீஸ் vs ஸ்மாக் டவுன் மகளிர் சாம்பியன் சார்லோட்டே பிளேர்

ரா டேக் அணி சாம்பியன்ஸ் ஷேமஸ் மற்றும் கேசரோ vs ஸ்மாக் டவுன் டேக் அணி சாம்பியன்ஸ் தி ஸோஸ்

தி ஷீல்ட் (ரோமன் ரெய்ன்ஸ், சேத் ரோல்லின்ஸ், டீன் அம்ப்ரோஸ்) vs தி நியூ டே (கோபி கிங்ஸ்டன், பிக் ஈ , சேவியர் வூட்ஸ்)

கிக்ஆப் முன்-நிகழ்ச்சி

WWE க்ரூஸர்வெய்ட் சாம்பியன்ஷிப் போட்டி

கலிஸ்டோ vs என்சோ அமோரே

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.