இந்திய அணி தோனி தலைமையில் பெற்ற 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ல் 50 ஒவர் உலகக்கோப்பை என இரண்டு தொடர்களிலும் அற்புதமாக ஆடியவர் யுவராஜ் சிங். கிட்டத்தட்ட இவர் இல்லை எனில் கோப்பை கிடைத்திருக்காது என்ற நிலைமை தான்.

ஆனால், தற்போது அணியில் இவருக்கு என ஒரு நிரந்தர இடம் இல்லாமல் இருந்து வருகிறார். இந்திய அணியில் தேர்வாகத் தேவைப்படும் யோ-யோ உடல் தகுதித் தேர்வில் மீண்டும் மீண்டும் தோல்வை அடைந்து வருவதால் அவர் இந்திய அணியில் இட்ம பிடிக்க திணறி வருகிறார்.

ஆனால், தற்போது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு நற்செய்தி வந்துள்ளது. குவாலியரின் ஐ.டி.எம் பல்கலைக்கழகம் அவருக்கு தத்துவவியலில் முனைவர் பட்டம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்த பலகலைக்கழகம் வெளியிட்ட செய்தியானது,
விளையாட்டில் அதிசிறந்து விளங்கியதற்க்காகவும், அதனை மாற்றும் ஒரு துடுப்பாக செயல்பட்டதற்காகவும்
யுவ்ராஜ் சிங்கிற்கு டாக்டர் பட்டம் வழ்ங்கவுள்ளோம், என அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
யுவராஜ் சிங்குடன் சேர்த்து , விண்வெளித்துறையில் இருந்து ஏ.எஸ். கிரண் குமார் ,

திரைத்துறையில் இருந்து கோவிந்த் நிகளானி, கவிதையில் இருந்து அசோக் வாஜ்பாய், ஊடகத்துறையில் இருந்து ராஜட் சர்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இருந்து மஸ்லேக்கர் மற்றும் சமூக சேவையில் இருந்து அருண் ராய் ஆகியோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிவிக்க உள்ளது அந்த பல்கலைக்கழகம்.