இவரை கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் எடுத்தாக வேண்டும்: வெளிநாட்டு வீரருக்காக வரிந்து கட்டும் யுவராஜ் சிங்க 1

அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் புதுவிதமான காட்டடியில் 30 பந்துகளில் 91 ரன்கள் விளாசி சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்பாக 2018-ல் அலெக்ஸ் ஹேல்ஸ் 32 பந்துகளில் 87 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

மராத்தா அராபியன்ஸ் அணிக்கு ஆடும் கிறிஸ் லின் தன் 30 பந்துகளில் 9 பவுண்டரிகள் 7 சிக்சர்களை விளாசினார், அதாவது 16 பந்துகளில் 78 ரன்கள். இவரது ஸ்ட்ரைக் ரேட் 303 . புக் கிரிக்கெட்டில் கூட ஆடிக்கொண்டே இருக்கும் போது சைபர் வந்து விடும். ஆனால் கிறிஸ் லின் ஆட்டத்தில் ஓய்வு ஒழிச்சலே இல்லாத அதிரடியைப் பார்க்க முடிந்ததகா ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இவரை கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் எடுத்தாக வேண்டும்: வெளிநாட்டு வீரருக்காக வரிந்து கட்டும் யுவராஜ் சிங்க 2

கொல்கத்தா அணி 2020 ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு கிறிஸ் லின்னை விடுவித்தது. இது பெரிய தவறு என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

“கிறிஸ் லின்னைத் தக்கவைக்காமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும் தவறிழைத்து விட்டது. கிறிஸ் லின் நம்ப முடியாத ஒரு இன்னிங்சை ஆடினார். நம்பவே முடியாத ஷாட்கள்.

ஐபிஎல் ஆட்டங்களிலேயே லின்னை நான் பார்த்திருக்கிறேன் கொல்கத்தாவுக்காக சில நம்ப முடியாத தொடக்கங்களை கொடுத்துள்ளார். அவரை ஏன் கொல்கத்தா விட்டு விட்டது, நிச்சயம் இது மோசமான முடிவாகும்” என்று யுவராஜ் சிங் ஆதங்கப்பட்டுள்ளார்.

இவரை கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் எடுத்தாக வேண்டும்: வெளிநாட்டு வீரருக்காக வரிந்து கட்டும் யுவராஜ் சிங்க 3
Chris Lynn of the Kolkata Knight Riders during match eighteen of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Kolkata Knightriders and the Kings XI Punjab held at the Eden Gardens Cricket Stadium in Kolkata on the 21st April 2018.
Photo by: Ron Gaunt / IPL/ SPORTZPICS

விடுவிக்கப்பட்ட வீரர்கள் அணிவாரியான விவரம்:

சிஎஸ்கே: பிஷ்னாய், டேவிட் வில்லே, துருவ் ஷோரி, மோஹித் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஸ்காட் குக்கெலெய்ன்

டெல்லி கேப்பிடல்ஸ்: அங்குஷ் பெய்ன்ஸ், பி.அய்யப்பா, கிறிஸ் மோரிஸ், கொலின் இங்ரம், கொலின் மன்ரோ, ஹனுமா விஹாரி, ஜலஜ் சக்சேனா, மஞ்சோட் கல்ரா, நாது சிங்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: அக்னிவேசஷ் அயாச்சி, ஆண்ட்ரூ டை , டேவிட் மில்லர் , மோய்சஸ் ஹென்றிக்ஸ் , பிரப்சிம்ரன் சிங் , சாம் கரண் , வருண் சக்ரவர்த்தி

கேகேஆர். : ஆன்ரிச் நார்ட்யே, கார்லோஸ் பிராத்வெய்ட், கிறிஸ் லின், ஜோ டென்லி , கே.சி.கரியப்பா, மேட் கெல்லி, நிகில் நாயக், பியூஷ் சாவ்லா, பிரிதிவி ராஜ் யாரா, ராபின் உத்தப்பா, ஸ்ரீகாந்த் முந்தே.இவரை கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் எடுத்தாக வேண்டும்: வெளிநாட்டு வீரருக்காக வரிந்து கட்டும் யுவராஜ் சிங்க 4

மும்பை இந்தியன்ஸ் : ஆடம் மில்ன, அல்ஜாரி ஜோசப் , பாரிந்தர் சரண், பென் கட்டிங், பியூரன் ஹென்றிக்ஸ், எவின் லூயிஸ், ஜேசன் பெஹண்ட்ராப், பங்கஜ் ஜஸ்வால், ரஷிக் தார், யுவராஜ் சிங்

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஆர்யமான் பிர்லா, ஆஷ்டன் டர்னர், இஷ் சோதி, ஜெய்தேவ் உனாட்கட், லியாம் லிவிங்ஸ்டோன், ஒஷேன் தாமஸ், பிரசாந்த் சோப்ரா, ராகுல் திரிபாதி, சுபம் ரஞ்சனே, ஸ்டூவர்ட் பின்னி, சுதேசன் மிதுன்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆகாஷ் தீப் நாத், கொலின் டி கிராண்ட் ஹோம், டேல் ஸ்டெய்ன், ஹென்ரிச் கிளாசன், ஹிம்மத் சிங், குல்வந்த் கேஜ்ரோலியா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிலிந்த் குமார், நேதன் கூல்ட்டர் நைல், பிரயாஸ் ரே பர்மன், ஷிம்ரன் ஹெட்மையர், டிம் சவுதி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: தீபக் ஹூடா, மார்டின் கப்தில், ரிக்கி புய், ஷாகிப் அல் ஹசன், யூசுப் பத்தான்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *