இவையெல்லாம் கற்பனையில் நடக்கும் கதைகள்: விராட் கோலியை வாழ்த்திய யுவ்ராஜ் சிங்!! 1
India's Vuvraj Singh(L)celebrates with teammate Vurat Kohli after his dismissal of Australia's Steve Smith during the World T20 cricket tournament match between India and Australia at The Punjab Cricket Stadium Association Stadium in Mohali on March 27, 2016. / AFP / MONEY SHARMA (Photo credit should read MONEY SHARMA/AFP/Getty Images)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதமெடுத்து அசத்தியுள்ளார். இது அவருடைய 40-வது ஒருநாள் சதம்.

107 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார் விராட் கோலி. இது அவருடைய 40-வது ஒருநாள் சதம். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து மகத்தான பேட்ஸ்மேனாக விளங்கும் விராட் கோலி, 216 இன்னிங்ஸில் இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளார். அதிக ஒருநாள் சதங்கள் அடித்த பட்டியலில் 49 சதங்களுடன் சச்சின் முதலிடத்திலும் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 116 ரன்கள் குவித்தார். விஜய் ஷங்கர் 46 ரன்கள் சேர்த்தார். ஆஸி. தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.இவையெல்லாம் கற்பனையில் நடக்கும் கதைகள்: விராட் கோலியை வாழ்த்திய யுவ்ராஜ் சிங்!! 2

251 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பிஞ்ச் 37, கவாஜா 38, ஹேண்ட்ஸ்கோம்ப் 48, ஸ்டோய்னிஸ் 52, கேரி 22 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கிச் சென்றனர்.

இந்நிலையில், 49.3 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பும்ரா, விஜய் ஷங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 2-0 என்ற கணக்கில் இந்த தொடரில்  இந்தியா முன்னிலை வகிக்கிறது.

விராட் கோலி அடித்த 40-வது சதம் உண்டாக்கிய சாதனைகள்:

விராட் கோலியின் சதம்…இவையெல்லாம் கற்பனையில் நடக்கும் கதைகள்: விராட் கோலியை வாழ்த்திய யுவ்ராஜ் சிங்!! 3

40-வது ஒருநாள் சதம்
65-வது சர்வதேச சதம்
18-வது ஒருநாள் கேப்டனாக
36-வது அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும்

அதிக ஒருநாள் சதங்கள்

49 சச்சின் டெண்டுல்கர் (452 இன்னிங்ஸ்)
40 விராட் கோலி (216 இன்னிங்ஸ்)
30 ரிக்கி பாண்டிங் (365 இன்னிங்ஸ்)

விராட் கோலியின் 40 ஒருநாள் சதங்கள்

8 vs இலங்கை
7 vs மே.இ, ஆஸ்திரேலியா
5 vs நியூஸிலாந்து
4 vs தென் ஆப்பிரிக்கா
3 vs இங்கிலாந்து, வங்கதேசம்
2 vs பாகிஸ்தான்
1 vs ஜிம்பாப்வே

இந்தியாவில் விராட் கோலியின் கடைசி 50+ ஸ்கோர்கள்

121 113 140 157* 107 116

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள்

9 சச்சின் டெண்டுல்கர் (70 இன்னிங்ஸ்)
7 விராட் கோலி (31 இன்னிங்ஸ்)
7 ரோஹித் சர்மா (33 இன்னிங்ஸ்)

* மூன்று வெவ்வேறு அணிகளுடன் 7 அல்லது அதற்கும் அதிகமான ஒருநாள் சதங்கள் எடுத்த ஒரே வீரர் – விராட் கோli; vs இலங்கை (8), vs மே.இ. அணி (7), vs ஆஸ்திரேலியா (7)

ஒருநாள் கிரிக்கெட்டில் 1000-க்கும் அதிகமான பவுண்டரிகள் அடித்த இந்திய வீரர்கள்

சச்சின், கங்குலி, சேவாக், விராட் கோலி.வ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *