இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடந்தது.
இந்தியாவின் 228 வீரர்கள், வெளிநாட்டின் 123 வீரர்கள் என 13 நாடுகளில் இருந்து மொத்தம் 351 பேர் பங்கேற்றனர். அடிப்படை விலை ரூ. 1 கோடிக்கு யுவராஜ் பெயர் அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே இவரை எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை. இதுபோல மனோஜ்திவாரி, புஜாரா, ஹேல்ஸ், பிரண்டன் மெக்கலம், கப்டில், கிறிஸ் வோக்ஸ், யுவராஜ், நமன் ஓஜா, மெக்டமர்ட் உள்ளிட்ட வீரர்களையும் யாரும் வாங்கவில்லை.
இரண்டாவது சுற்றில் யுவராஜ் சிங்கை அடிப்படை விலை ரூ. 1 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. இதேபோல கப்டிலும் ரூ. 1 கோடிக்கு வாங்கப்பட்டார். முதல் சுற்றில் விலை போகாத அக்ஸ்தீப் நாத், அடுத்த சுற்றில் ரூ. 3.6 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது.
முதல் சுற்றில் ஆரம்ப விலையான ஒரு கோடிக்கு விலைபோகாத யுவராஜ் சிங் 2-வது சுற்றில் அதே விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஒரு தொடராக இருப்பது ஐபிஎல் டி20 கிரிக்கெட். உலக வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை கலக்கும் களமாக அது உள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 12வது ஐபிஎல் தொடரின் ஏலம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளைச் சேர்ந்த 1003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் பதிவு செய்த வீரர்களில் 346 பேரை ஏலப் பட்டியலுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழு தேர்வு செய்தது.
இதில் வீரர்களின் தற்போதைய ஸ்டிரைக் ரேட்டை பொறுத்து, அவர்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதில் அதிகபட்சமாக உனத்கட், வருண் சக்கரவர்த்தி 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
யுவராஜ் சிங்கின் ஆரம்ப விலை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதல் சுற்றில் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து விலைபோகாத வீரர்கள் இரண்டாவது சுற்றில் ஏலம் விடப்பட்டனர். அப்போது மும்பை இந்தியன்ஸ் ஆரம்ப விலையான ஒரு கோடி ரூபாய்க்கே ஏலம் எடுத்தது.வ்
I am glad to be part of the @mipaltan family, looking forward for the season to begin. See u soon @ImRo45 ?
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 18, 2018
விலை போகாத வீரர்கள்
டெஸ்ட் வீரர் புஜாரா, மனோஜ்திவாரி, ஹேல்ஸ், பிரண்டன் மெக்கலம், கிறிஸ் வோக்ஸ், யுவராஜ், நமன் ஓஜா, மெக்டமர்ட், ராகுல் சர்மா, ஆடம் ஜாம்பா, மனன் வோரா, சச்சின் பேபி, அன்கீத் பாவ்னே, அர்மான் ஜாபர், சக்சேனா, பாபா இந்திரஜித், அருண் கார்த்திக், சாய் கிஷோர், முருகன் அஷ்வின், கவாஜா, ஷான் மார்ஷ், கரியப்பா, சவுரப் திவாரி, அபிமன்யு மிதுன், வினய் குமார், பர்வேஸ் ரசூல், மாத்யூஸ், கோரி ஆண்டர்சன், ஜிம்மி நீஷம், ரிச்சர்ட்சன், மன்பிரீத் கோனி, பட்டின்சன், கிறிஸ்டியன், ஹோல்டர், இஷான் போரல், ஷெல்டன் ஜாக்சன், ரான்கி, முஷ்பிகுர், குசல் பேரரா, மார்னே மார்கல், ஸ்டைன் உள்ளிட்ட வீரர்களை யாரும் வாங்கவில்லை.