2019 உலக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்காக ஆடுவார் சுபமன் கில்: யுவராஜ் சிங் 1

உள்ளூர் போட்டிகளில் அடுத்தடுத்து அசத்தலாக ஆடி பல சாதனைகளை படைத்து வரும் 19 வயதான இளம் வீரர் சுபமன் கில் 2019 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணிக்காக ஆடுவார் என யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறியதாவது ….

19 வயதான அவர் ஒரு அற்புதமான வீரர் அனைத்து வகையான கிரிக்கெட் ஒழுக்கத்தையும் கற்று வைத்திருக்கிறார். அற்புதமாக ஆடும் அவர் இந்திய அணிக்கு ஆட தகுதியானவர். 2019 உலகக்கோப்பை தொடரில் அவர் இடம் பெறவில்லை என்றாலும் கண்டிப்பாக அதற்கு அடுத்து இந்திய அணிக்காக ஆடி பல சாதனைகளை அவர் இவ்வாறு கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

இந்நிலையில் சிட்னியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் நோக்கி சென்று கொண்டிருக்கிறதுஆஸ்திரேலிய மண்ணில், 71 வருடத்துக்குப் பிறகு தொடரை வென்று சாதனை படைக்க இந்திய கிரிக்கெட் அணி காத்திருக்கிறது.2019 உலக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்காக ஆடுவார் சுபமன் கில்: யுவராஜ் சிங் 2

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் புஜாரா 193 ரன், ரிஷாப் பன்ட் 159 ரன், மயங்க் அகர்வால் 77 ரன், ஜடேஜா 81 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் லியான் 4, ஹசல்வுட் 2, ஸ்டார்க் 1 விக்கெட் டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 300 ரன்னுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் அதிகப்பட்சமாக 79 ரன் எடுத்தார்.2019 உலக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்காக ஆடுவார் சுபமன் கில்: யுவராஜ் சிங் 3

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளும் பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். வெற்றிக்கு இன்னும் 322 ரன் என்ற தேவை என்ற நிலையில் பாலோ ஆன் பெற்ற ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

 

1988-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் ஆஸ்திரேலிய அணி பாலோ-ஆன் பெற்று தோல்வி அடைந்தது. அதற்கு பின் 31 ஆண்டுகளாக, உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் அந்த அணி, பாலோ ஆன் பெற்றதில்லை. இப்போதுதான் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பெருமையான விஷயம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சிட்னியில் மழை பெய்துவருவதால் கடைசி நாளான இன்று போட்டி இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால், இந்த டெஸ்ட் டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிப்பதால் தொடரை கைப்பற்று வது உறுதியாகி விட்டது.

இதற்கு முன், ஆசிய அணிகள் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அதனால் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்கக் காத்திருக்கிறது. அதாவது 71 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி அங்கு வெற்றி பெற்று சாதனை படைக்க இருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *