புதிய டி20 அணியில் ஒப்பந்தம் செய்த யுவராஜ் சிங்! 1

2011 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தொடர் நாயகன் யுவராஜ் சிங் அவரது ரசிகர்களின் வேதனையை அதிகரித்து சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அளித்தார்.

ஓய்வு அறிவித்த அன்றே அயல்நாட்டு டி20 லீகுகளில் ஆடும் தன் விருப்பத்தை அவர் தெரிவித்திருந்தார். அதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியையும் பெறப்போவதாக தெரிவித்திருந்தார்.

யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்து விட்டதால் பிசிசிஐயின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் இவருக்குப் பொருந்தாது, எனவே இவர் கனடா குளோபல் டி20 தொடரில் ஆடுகிறார்.புதிய டி20 அணியில் ஒப்பந்தம் செய்த யுவராஜ் சிங்! 2

கனடா குளோபல் டி20 தொடரின் 2ம் அத்தியாயம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் பிராம்ப்டனில் நடைபெறும். இதில் வான்குவர் நைட்ஸ், வின்னிபெக் ஹாக்ஸ், எட்மண்டன் ராயல்ஸ், மாண்ட்ரீல் டைகர்ஸ், டொராண்டோ நேஷனல்ஸ் ஆகிய அணிகள் ஆடுகின்றன. கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ் பி அணி இருந்தது, இம்முறை அதற்குப் பதிலாக பிராம்ப்டன் உல்வ்ஸ் அணி ஆடுகிறது.

இந்த குளோபல் டி20 தொடரில் டொராண்டோ நேஷனல் அணிக்கு யுவராஜ் சிங் ஆடுகிறார். இந்த 2019 சீசனில் இதில் ஆடும் மற்ற பெரிய தலைகள் கேன் வில்லியம்சன், பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் லின், ஷோயப் மாலிக், டுபிளெசிஸ், ஷாகிப் அல் ஹசன், கொலின் மன்ரோ ஆகியோராவர்.

கடந்த சீசனிலிருந்து இந்த சீசனுக்கும் தக்கவைக்கப்பட்டவர்களில் கிறிஸ் கெய்ல், டிவைன் பிராவோ, ஆந்த்ரே ரஸல், கிரன் போலார்ட், திசர பெரேரா, சுனில் நரைன் ஆகியோர் அடங்குவர்.

 

 

இந்திய அணியிலும், ஐபிஎல் ஏலத்தில் முதல் சுற்றிலும் இடம் பெற முடியாமல் தவித்த யுவராஜ் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடிப்படை விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மும்பை அணியின் முதல் ஆட்டத்தில் யுவராஜ் இடம்பெற்றார். இந்த ஆட்டத்தில் மும்பை தோற்றாலும் யுவராஜ் அதிரடியாக ஆடி அரைசதமடித்தார். 35 ரன்னில் 53 ரன்களை குவித்தார் யுவராஜ். அதன் பின் பேசிய யுவராஜ், தனது ஓய்வு பற்றியும், சச்சின் தனக்கு உதவியது பற்றியும் கூறியுள்ளார்.

“கடந்த இரண்டு வருடங்களாக நான் சரிவை சந்தித்து வருகிறேன். ஆனாலும் நான் கிரிக்கெட்டை விடவில்லை. நான் 14,16 வயதுகுட்பட்ட கிரிக்கெட்டிலிருந்து ஆடி வருகிறேன். எனக்கு கிரிக்கெட் தான் எல்லாம். என்னால் கிரிக்கெட் ஆட முடியும் என்ற நம்பிக்கை உள்ள வரை ஆடுவேன்” என்றார்.

புதிய டி20 அணியில் ஒப்பந்தம் செய்த யுவராஜ் சிங்! 3
MONACO – FEBRUARY 26: Yuvraj Singh speaks during the Laureus Power Of Sport Digital Night at Meridien Beach Plazza on February 26, 2018 in Monaco, Monaco. (Photo by Boris Streubel/Getty Images for Laureus)

37 வயதான யுவராஜ் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சச்சினிடம் பேசியதாக கூறினார். “அவருடன் பேசியது என்னை 37,38 வயதில் கிரிக்கெட் ஆடும் உத்வேகத்தை தந்தது” என்றார்.

மும்பை சிறப்பாக இந்த ஐபிஎல் தொடரை துவங்கவில்லை. நேற்று வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை , டெல்லி இடையேயான போட்டியில் டெல்லி 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய மும்பை 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷாந்த் ஷர்மா, ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *