இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹால், இரண்டு வருடங்களுக்கு முன்பாக இன்றைய தினம் தான் தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆடியிருக்கிறார். இதை நினைவு கூறும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்திய அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் முன்னணி லெக் ஸ்பின்னர் இரண்டு வருடங்களாக இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், அஸ்வின் க்கு பதிலாக இரக்கப்பட்டு இவர், பேட்ஸ்மேன்களை தனது சுழற்பந்து வீச்சால் தினறடிக்க செய்வார்.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில், இவரின் சூழல் விதம் மிக சிறப்பாக அமைவதால் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். சூழலுக்கு சதகம் இல்லாத மைதானத்தில் சரியான ஏரியாக்களில் பந்துவீசி ரன் விகிதத்தை தன் கட்டுக்குள் வைத்திருப்பார்.
சென்ற வருடம் டி20 போட்டியில் இவர் எடுத்த ஒரு இன்னிங்சில் இவர் எடுத்த 6 விக்கெட்டுகள் சென்ற ஆண்டின் சிறந்த பந்து வீச்சாக ஐசிசி நிர்வாகத்தால் அங்கீகரிக்க பட்டது. இதற்க்காக இவருக்கு விருதும் வழங்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்று தான் அவர் தனது முதல் ஒருநாள் போட்டியை ஆடினார். தோனி கையினால் தனது முதல் ஒருநாள் போட்டிக்கான தொப்பியை வாங்கினார் என்பதையும் வலை தளத்தில் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஹாயானவில் ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்த எனக்கு எனது கடின உழைப்பினால் இது சாத்தியம் ஆனது. இதேபோல் அனைவரும் கடினமாக முழு முயற்சியுடன் உழைத்தால் நிச்சயம் தங்கள் கனவை நனவாக்கலாம்.