இக்கட்டான சூழ்நிலையை சரியாகத்தான் கையாண்டு இருக்கிறார் தோனி - ஜாகிர்கான் சப்போர்ட் 1

இக்கட்டான சூழ்நிலையை சரியாகத்தான் கையாண்டு இருக்கிறார் தோனி – ஜாகிர்கான் சப்போர்ட்

அவர் இறங்கிய நேரத்தில் முதலில் நன்றாகத்தான் ஆடினார். சரியான நேரத்தில் விராட் கோலி மற்றும் ரெய்னாவின் விக்கெட் விழுக அவரால் அடுத்து அடித்து ஆட முடியவில்லை. ஹர்திக் பாண்டியவும் பெவிலியன் திரும்பிய பின்னர், பொறுப்புணர்வுடன் எப்படி ஆடவேண்டுமோ அதேபோல் தான் தோனி ஆடினார்.

என கூறி தோனிக்கு கை கொடுத்துள்ளார் ஜாகீர்கான்.

விராட்கோலி தலைமையில் முதல் தொடர் தோல்வி

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2016–ம் ஆண்டில் இருந்து இந்திய அணி இரண்டு நாடுகள் இடையிலான 9 ஒருநாள் போட்டி தொடரை தொடர்ச்சியாக வென்று இருந்தது. இந்திய அணியின் இந்த வெற்றி பயணத்துக்கு இங்கிலாந்து அணி முட்டுக்கட்டை போட்டது. விராட்கோலி தலைமையில் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை இழப்பது இதுவே முதல்முறையாகும். விராட்கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 7 ஒருநாள் போட்டி தொடரை வென்று இருந்தது.இக்கட்டான சூழ்நிலையை சரியாகத்தான் கையாண்டு இருக்கிறார் தோனி - ஜாகிர்கான் சப்போர்ட் 2

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இதுபோன்ற போட்டிகள் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக நாம் எந்த துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதாகும். உலக கோப்பை போட்டிக்கு முன்பு அனைத்து துறையிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) சிறப்பான திறனை கொண்ட அணியாக மாற வேண்டியது அவசியமானதாகும். ஏதாவது ஒரு துறையில் மட்டும் சிறப்பான திறனை கொண்டு இருப்பதை நம்பி இருக்க முடியாது. எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

30 ரன்கள் குறைவாக எடுத்தோம்

நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த போட்டியில் ரன்கள் எடுக்கவில்லை. 25 முதல் 30 ரன்கள் குறைவாக எடுத்தோம். ஆனால் இங்கிலாந்து அணி பந்து வீச்சு, பீல்டிங், பேட்டிங் என எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதி படைத்தவர்கள். இங்கிலாந்து போன்ற சிறந்த அணிக்கு எதிராக ஆடுகையில் சிறப்பான திறனை வெளிப்படுத்த வேண்டும். ஆட்டம் முழுவதும் ஆடுகளம் மெதுவாக இருந்ததை பார்க்க வியப்பாக இருந்தது. இங்கிலாந்தில் இப்படி ஒரு ஆடுகளத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. பந்து எங்கு திரும்பும் என்பதை கணிக்க கடினமாக இருந்தது. இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியதுடன் சீரான இடைவெளியில் விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.இக்கட்டான சூழ்நிலையை சரியாகத்தான் கையாண்டு இருக்கிறார் தோனி - ஜாகிர்கான் சப்போர்ட் 3

கடைசி ஆட்டத்தில் 3 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டது அவசியமான ஒன்று தான். தினேஷ் கார்த்திக் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். அவர் தனது நல்ல தொடக்கத்தை பெரியதாக மாற்றவில்லை. ‌ஷர்துல் தாகூருக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து திரும்பினார். அடில் ரஷித் எனது விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சு அற்புதமானது. டெஸ்ட் போட்டி தொடர் நீண்டதாகும். இங்கிலாந்து அணியினர் எங்களுக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பது தெரியும். சவால் நிறைந்த போட்டியில் விளையாட நாங்கள் விரும்புகிறோம்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *