அதிர்ச்சி செய்தி: ஜிம்பாவே கிரிக்கெட் வாரியத்திற்கு தடை விதித்தது ஐசிசி!! காரணம் என்ன? 1

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை விதித்து ஐசிசி வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் அரசு தலையீடு இருப்பதாகக் கூறி லண்டனில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில்,

ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக அவசர நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது. கிரிக்கெட்டில் அரசு தலையீடு இருக்கக் கூடாது என்பதில் ஐசிசி உறுதியாக உள்ளது. ஆனால், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய அளவில் அரசின் தலையீடுகள் உள்ளன. கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணித் தேர்வுகளில் பாரபட்சம் காட்டப்படுகின்றன. அதிர்ச்சி செய்தி: ஜிம்பாவே கிரிக்கெட் வாரியத்திற்கு தடை விதித்தது ஐசிசி!! காரணம் என்ன? 2

எனவே ஐசிசியின் கொள்கையின் அடிப்படையில் ஒரு நாட்டின் கிரிக்கெட் வாரியத்தில் அரசு தலையீடு இருப்பதை விரும்பவில்லை. அதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிதியுதவி உடனடியாக நிறுத்தப்படுகிறது.

விதிகளின் அடிப்படையில் மட்டுமே ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர வேண்டும் என ஐசிசி விரும்புகிறது என்று தெரிவித்தார்.

அதிர்ச்சி செய்தி: ஜிம்பாவே கிரிக்கெட் வாரியத்திற்கு தடை விதித்தது ஐசிசி!! காரணம் என்ன? 3

தென் ஆப்பிரிக்காவைப் போலவே ஜிம்பாவே கிரிக்கெட்டிலும் பல அரசியல் தலையீடுகளும், பல பாரபட்சங்களும் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1990களின் வாக்கில் உலகின் டாப் 5 அணிகளில் ஒன்றாக இருந்தது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி. 2000த்தின்முதல் பாதியில் சரிவை காணத் தொடங்கியது

அந்த அணியில் நடைபெற்ற அரசியல் தலையீடுகள், இன ஒதுக்கல், இனத்தின் காரணமாக காட்டும் பாரபட்சம் என அனைத்தும் சேர்ந்து அந்த கிரிக்கெட் வாரியத்தையும் அந்த அணியையும் தற்போது பாதாளத்திற்கு தள்ளியுள்ளது இது குறித்து பல கிரிக்கெட் வீரர்கள் பலவாறு பதிவு செய்து வருகின்றனர். தற்போது ஒட்டுமொத்தமாக ,இந்த கிரிக்கெட்டில் முழு அரசியல் தலையீடு உள்லது என அதனால் வேறு வழியில்லாமல் ஐசிசி அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

அதிர்ச்சி செய்தி: ஜிம்பாவே கிரிக்கெட் வாரியத்திற்கு தடை விதித்தது ஐசிசி!! காரணம் என்ன? 4
Former captains Brendon Taylor and Graeme Cremer will not take part in next month’s T20 international tri-series against Australia and Pakistan after they were left out of Zimbabwe’s training squad announced overnight.

இதன் காரணமாக இனி வரும் என்ற ஐசிஐசிஐ தொடர்களிலும் ஜிம்பாவே ஆட முடியாது. மேலும் இதற்கான நடவடிக்கைகளை ஜிம்பாவே எடுக்க வேண்டும். இல்லையெனில் நிரந்தரமாக தடை செய்யப்படும் .அதனைத் தாண்டி ஐசிசி ஜிம்பாவேவிற்கு அனுப்பியுள்ள தனது பிரதிநிதிகளையும் திரும்பப் பெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *