ஐ.எஸ்.எல் கோலாகலத் துவக்கம், கேரளா-கொல்கத்தா சீசனின் முதல் ஆட்டம் ட்ரா 1

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா கொச்சியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. ஐ.எஸ்.எல் கோலாகலத் துவக்கம், கேரளா-கொல்கத்தா சீசனின் முதல் ஆட்டம் ட்ரா 2இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்.சி., புனே சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., கோவா எப்.சி., பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க விழா கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது. இந்தி நடிகர் சல்மான்கான் நடன கலைஞர்கள் புடை சூழ பேட்டரி சைக்கிளில் மைதானத்தை வலம் வந்தார். பின்னர் அவரும், பாலிவுட் நடிகை கத்ரினா கைப்பும் கலக்கலாக நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.ஐ.எஸ்.எல் கோலாகலத் துவக்கம், கேரளா-கொல்கத்தா சீசனின் முதல் ஆட்டம் ட்ரா 3

அதைத் தொடர்ந்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கேப்டன் சந்தேஷ் ஜின்கான், அட்லெடிகோ டி கொல்கத்தா கேப்டன் ஜோர்டி பிக்யூராஸ் மோன்டெல் ஆகியோர் விழா மேடைக்கு அழைக்கப்பட்டனர். கேரள அணியின் உரிமையாளர்களில் ஒருவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், பிரபல நடிகர் மம்முட்டி ஆகியோரும் மேடைக்கு வருகை தந்தனர்.

இதன் பின்னர் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கால்பந்தை போட்டி ஒருங்கிணைப்பு குழு சேர்மன் நிதா அம்பானியிடம் மம்முட்டி வழங்க, போட்டி முறைப்படி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.ஐ.எஸ்.எல் கோலாகலத் துவக்கம், கேரளா-கொல்கத்தா சீசனின் முதல் ஆட்டம் ட்ரா 4

கலைநிகழ்ச்சிக்கு பிறகு இரவு 8 மணிக்கு அரங்கேறிய முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, கேரளா பிளாஸ்டர்சுடன் மல்லுகட்டியது. விறுவிறுப்பான இந்த மோதலில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முனைப்பு காட்டினர். பந்து கொல்கத்தா பக்கமே (57 சதவீதம்) சற்று அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தது.

ஆனால் இரண்டு அணியிலும் கோல் கீப்பர்கள் கச்சிதமாக செயல்பட்டதால் அனைத்து முயற்சிகளும் வீணாயின. குறிப்பாக கொல்கத்தா வீரர் அடித்த ஒரு நல்ல ஷாட்டை, கேரளா கோல் கீப்பர் பால் ராசுப்கா அருமையாக தடுத்து நிறுத்தினார். ஒரு கோலாவது விழாதா? என்று ஏக்கமுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. ஐ.எஸ்.எல் கோலாகலத் துவக்கம், கேரளா-கொல்கத்தா சீசனின் முதல் ஆட்டம் ட்ரா 5ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. ஐ.எஸ்.எஸ். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் எந்த அணிக்கும் வெற்றி கிடைக்காதது இதுவே முதல் முறையாகும்.

2-வது நாளான இன்று இரவு 8 மணிக்கு கவுகாத்தியில் நடக்கும் ஆட்டத்தில் அறிமுக அணியான ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) எதிர்கொள்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *