ரொனால்டோவிற்கு 4 ஆவது குழந்தை 1

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் 32 வயதான ரொனால்டோ, இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுகிறார். இவருடன் மெஸ்சி, நெய்மர் ஆகியோர் சிறந்த வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.ரொனால்டோவிற்கு 4 ஆவது குழந்தை 2

கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஏற்கனவே கிறிஸ்டியானோ ஜூனியர் என்ற மகன் உள்னான். இவர் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தான். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வரும் ஜூனியரின் தாயார் குறித்து ரொனால்டோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.ரொனால்டோவிற்கு 4 ஆவது குழந்தை 3

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த வாடகைத் தாய் மூலம் ரொனால்டோவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்த இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகள்.

இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பிணியான அவருக்கு நேற்று கிறிஸ்டியானோவின் சொந்த ஊர் அருகில் உள்ள குய்ரோன் யுனிவர்சல் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அலானா மார்ட்டினா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.ரொனால்டோவிற்கு 4 ஆவது குழந்தை 4

தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு நான்கு குழந்தைகள் உள்ளன. 7 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று ரொனால்டோ ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *