ரஞ்சி ட்ராபியின் முதல் போட்டியில் அஸ்வின் மற்றும் விஜய், தமிழக அணி கேப்டன் அபிநவ் முகுந்த்!!

ரஞ்சி டிராபி தொடருக்கான தமிழ்நாடு அணியில் அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் முதன்மையாக கருதப்படுவது ரஞ்சி டிராபி. முதல்தர தொடரான 2017-18-ம் ஆண்டுக்கான இந்தத் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதற்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர் அபிநவ் முகுந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 அணியில் விளையாட இருப்பதால் கேப்டன் பதவி கிடைக்கவில்லை. அபிநவ் முகுந்திற்கும், […]