பாகிஸ்தானிடம் ஜெயித்து விட்டுப் பேசுங்கள் : டீன் ஜோன்ஸ காட்டம்

0
36

நீங்கள் நெ.1 டெஸ்ட் அணி என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தான், உண்மையிலேயே இந்தியா நெ.1 டெஸ்ட் அணி என்றால் பாகிஸ்தானை மோதி ஜெயித்து விட்டுப் பின்னர் பேசுங்கள் என இந்திய அணியை உதாசீனம் செய்துள்ளார் டீன் ஜோன்ஸ.

முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான டீன் ஜோன்ஸ இந்தியா எப்போது பாகிஸ்தான் உடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் என்பதை காண நான் மிகவும் ஆவலாக உள்ளேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

TNPL ல் டீன் ஜோன்ஸ் :

தற்போது தமிழகத்தில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் வர்ணனையாளராக செயல் பட்டு வரும் அவர் மேலும் கூறுகையில்,

இந்தியா போன்ற உலகில் பல அணிகள் பாகிஸ்தான் அணியுடனான தொடர்பை துண்டித்து அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதற்கு அச்சம் கொள்கின்றனர். இது தவறாகும். சமீபத்தில் மேற்கு உலக நாடுகளான ஐரோப்பாவிலும் தான் பாகிஸ்தானில் நடப்பது போன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தேறியது. ஆனால் அந்த நாட்டிற்கு சென்று விளையாடுவதை எந்த நாடும் தவிக்கவில்லை. சமீபத்தில்ல ண்டனில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகும் கூட அங்கு அடுத்தடுத்து விளையாட்டு சம்பந்தமான நடவடிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன. ஆனால் பாகிஸ்தானிற்கு மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை என கேள்வி எழுப்பியுள்ளார் டின் ஜோன்ஸ். இவர் பாகிஸ்தானில் நடக்கும் டி20 தொடரின் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பலி தீர்த்த பாகிஸ்தான் :

மேலும் அவர் கூறியதாவது, தற்போது நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் வென்றது பாகிஸ்தான் அணி தான். அதுவும் இந்தியாவை இறுதி ஆட்டத்தில் வென்று தனது மீதான பழைய கலங்கத்தை துடைத்துள்ளது. இதிலிருந்தே தெரியவில்லையா அந்த அணி எவ்வளவு தரமான அணி என்று, ஆனால் நீங்கள் அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட பாசாங்கு காட்டி வருகிறீர்கள் என கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.

இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைபற்றியுள்ளது. ஒன்றும் இல்லாத இலங்கை அணியை வென்றதில் அவ்வளவு பெருமை தேடாதீர்கள். முடிந்தால் பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் தொடரில் வென்று விட்டு பேசுங்கள், பாசாங்கு வேண்டாம் என இந்திய அணியை சாடியுள்ளார் டீன் ஜோன்ஸ்.

பாகிஸ்தானின் சாம்பியன்யஸ் ட்ராபி :

சமீபத்தில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் ட்ராபியை சர்ஃபராஸ் அஹமது தலைமையிலான அணி வென்ற பிறகு அதன் பக்கத்து நாடான ஆப்கானிஸ்தான் அணி சுற்றுப்பயணம் செய்ய சம்மதம் தெரிவித்தது, ஆனால் சுற்றுபயணம் தொடங்குவதற்க்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிக்க அந்த் அணி இதற்க்கு பாகிஸ்தான் தன் காரணம் என காட்டி அந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. மேலும் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை, அந்நாடு தீவிரவதிகளுக்கு சொர்க்கம் எனவும் சாடியது.

மேலும் , கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னர் இல்லாடத அல்விற்க்கு வள்ரச்சி பெற்று வருகிறது, மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தான் இம்மாதிரியான வளர்ச்சிக்கு காரணம் எனவும் அந்த லீக்கை பெருமைப்படுத்தி பாராட்டினார்.

SHARE
Just a normal human being with some passion on Cricket. And am a Civil Engineer, YouTuber, Freelancer, Former Junior Engineer Govt.Of India, UPSC Aspirant.